தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கான திமுக வேட்பாளர் மாவட்டச் செயலாளர் என்.பெரியசாமியின் குடும்பத் துக்குத்தான் வழங்கப் போகிறார்கள் - இது தான் தூத்துக்குடி திமுக- வில் இப்போது நடக்கும் பரபரப்பு விவாதம்.
தூத்துக்குடி திமுக எம்.பி.யான ஜெயதுரை, ராஜாத்தி அம்மாள், கனிமொழி தயவில் தனக்கு மறுபடியும் சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். இவருக்குப் போட்டியாக மாவட்டச் செயலாளர் என்.பெரியசாமி, தனது மகன் ஜெகனை களமிறக்குகிறார். இவர்களுக்கு மத்தியில் முன்னாள் மத்திய அமைச்சர் ராதிகா செல்வி, முன்னாள் எம்.பி. ஏ.டி.கே. ஜெயசீலன் உள்ளிட்டவர்களும் திமுக தலைமையை நெருக்குகிறார்கள். ஆனால், எத்தனை பேர் போட்டிக்கு வந்தாலும் பெரியசாமி யின் ஒத்துழைப்பு இல்லாமல் யாரும் ஜெயிக்க முடியாது என்பதால் பெரியசாமி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரையே வேட்பாளராக நிறுத்தி விடலாம் என்ற முடி வில் தலைமை இருப்பதாகச் சொல்பவர் கள், தலைமையின் சிபாரிசு பெரியசாமி யின் மகள் கீதா ஜீவன் என்கின்றனர். இதற்கிடையில் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தனது ஆதரவாளர் டேவிட் செல்வினுக்காக தூத்துக்குடியை கேட்பதாகச் சொல்கின்றனர். ஆனால், ’இந்த முறை எம்.பி. சீட்டை பெரிய சாமிக்கு விட்டுக் கொடுங்கள், அடுத்து வரும் திமுக ஆட்சியில் உங்களுக்கு அமைச்சர் பதவிதரப்படும்’ என்று தலைமையி லிருந்து அனிதாவை ஆறுதல் படுத்தியதாகவும் கூறப்படுகிறது.