தமிழகத்தில் பன்றிக்காய்ச்சலைக் கட்டுப்படுத்த கபசுர குடிநீர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பன்றிக்காய்ச்சலை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சித்த மருத்துவர்கள் தலைமைச் செயலகத்தில் கபசுர குடிநீரை அறிமுகப்படுத்தினர்.
11வகை மூலிகைகளைக் கொண்ட கபசுர குடிநீர் தயாரிக்கப்படுகிறது. பன்றிக்காய்ச்சல் வந்தவர்கள் குடித்தால் 10 நாளில் நோய் குணமாகும் என்று சித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
காய்ச்சல் இல்லாதவர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கபசுர குடிநீரைப் பருகலாம். ஆரம்ப சுகாதார நிலையங்கள், சித்த மருத்துவமனைகளில் இந்த குடிநீர் கிடைக்கும்.