தமிழகம்

ஸ்ரீரங்கத்தில் அதிகாரிகளை அமைச்சர்கள் மிரட்டுகின்றனர்: தமிழக பாஜக தலைவர் தமிழசை புகார்

செய்திப்பிரிவு

பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று சென்னையில் கூறியதாவது: தமிழகத் தில் பாஜக உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது. இது வரை 13 லட்சம் பேர் கட்சியில் இணைந்துள்ளனர். மார்ச் மாதத்துக் குள் மேலும் 2 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க உள்ளோம்.

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர் தலில் எங்களுக்கான ஆதரவு பெருகியுள்ளது. இதுவரை ஆட்சி செய்த திமுக, அதிமுகவுக்கு எதிராக கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு பிரச்சாரம் செய்துவருகிறோம். அங்கு நான் 2 நாட்கள் பிரச்சாரம் செய்ய உள்ளேன். கட்சியின் மூத்த நிர்வாகிகளான இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட வர்களும் பிரச்சாரம் செய்ய உள்ளனர்.

ஊழல் வழக்கில் ஜெயலலிதா பதவி இழந்ததால், ஸ்ரீரங்கத்தில் தேர்தல் திணிக்கப்பட்டுள்ளது. எக்காரணத்தைக் கொண்டும் ஊழலை தலையெடுக்க விடக்கூடாது என்பதில் மக்கள் உறுதியோடு உள் ளனர்.

இந்த இடைத்தேர்தல் முறை யாக நடத்தப்பட வேண்டும். ஸ்ரீரங்கத் தில் முகாமிட்டுள்ள அமைச்சர்கள், தங்கள் துறை சார்ந்த அதிகாரிகளை மிரட்டி, அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட வைக்கின்றனர். இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

SCROLL FOR NEXT