ஈரோடு சத்யா ஐ.ஏ.எஸ். அகாடமியில் உதவி ஆய்வாளர் மற்றும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான இலவச மாதிரி வகுப்புகள் நாளை நடக்கிறது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) 2015-ம் ஆண்டு பல்வேறு பணியிடங்களுக்கான தேர்வுகள் குறித்த அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. நடப்பு ஆண்டில் பல்வேறு தேர்வுகள் மூலம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி நிரப்ப உள்ளது. அதோடு, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் 1078 உதவி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்பவும் தேர்வுகள் நடக்கவுள்ளன.
இந்தத் தேர்வுகளில் பங்கேற்று போட்டியாளர்கள் வெற்றி பெறும் வகையில், ‘நிச்சய அரசு வேலைத் திட்டம்’ என்ற சிறப்பு பயிற்சித் திட்டத்தினை ஈரோடு சத்யா ஐ.ஏ.எஸ். அகாடமி அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பயிற்சித் திட்டத்தின் முதல் பயிற்சி வகுப்பு நாளை (22-ம் தேதி) ஈரோடு சத்யா அகாடமியில் நடக்கிறது. இலவசமாக நடத்தப்படும் இந்த மாதிரி பயிற்சி வகுப்பில் கலந்து கொள்பவர்களுக்கு மாதிரி பாட கையேடுகள் மற்றும் இலவச மாதிரித் தேர்வும் நடத்தப்படவுள்ளது.
இந்த இலவச மாதிரி வகுப்பில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் ஈரோடு பேருந்து நிலையம் நல்லி மருத்துவமனை வீதியில் உள்ள சத்யா ஐஏஎஸ் அகாடமியை 0424 - 2226909 அல்லது 7401521948 என்ற எண்ணில் தொடர்புகொண்டு பதிவு செய்து கொள்ளலாம். சமீபத்தில் வெளியிடப்பட்ட வி.ஏ.ஓ மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப் -2 தேர்வு முடிவுகளில் இந்த பயிற்சி மையத்தில் படித்த 300-க்கும் மேற்பட்டோர் வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.