தமிழகம்

இளம்பெண் ஸ்டெம் செல் தானம்: மாணவனின் ரத்த புற்றுநோய் குணமானது - அப்பல்லோ மருத்துவமனை சாதனை

செய்திப்பிரிவு

இளம் பெண் தானம் செய்த ஸ்டெம் செல் மூலமாக மாணவனின் ரத்த புற்றுநோயை குணப்படுத்தி அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.

குஜராத் மாநிலம் சூரத் நகரை சேர்ந்தவர் அன்கிட் (17). 12-ம் வகுப்பு முடித்துவிட்டு, கல்லூரியில் பி.காம். படிப்பில் சேர உள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, இவருக்கு ரத்த புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை யடுத்து சென்னை தேனாம்பேட்டை யில் உள்ள அப்பல்லோ சிறப்பு புற்றுநோய் மருத்துவமனையில் அன்கிட் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் குழுவினர் பரிசோ தனை செய்துவிட்டு, இவருக்கு ஸ்டெம் செல் மூலம் சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர். அதன்படி ஸ்டெம் செல் தானம் செய்ய விருப்பம் தெரிவித்து பதிவு செய்யப்படும் சென்னை அடையாறில் உள்ள தாத்ரி அமைப்பை டாக்டர்கள் தொடர்பு கொண்டனர்.

அப்போது இந்த அமைப்பில் பதிவு செய்துள்ள ஆமதாபாத்தை சேர்ந்த இளம் பெண்ணான ஜினால் (24) என்பவரின் ஸ்டெம் செல், அன்கிட்டுக்கு பொருத்தமாக இருப் பது தெரியவந்தது. இதையடுத்து தாத்ரி அமைப்பினர் ஆமதாபாத் சென்று இளம் பெண்ணின் எலும்பில் உள்ள ஸ்டெம் செல்லை சேகரித்து வந்தனர். அன்கிட்டின் உடலில் தானமாக பெறப்பட்ட ஸ்டெம் செல் செலுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒன்றரை ஆண்டுகள் தீவிர கண்காணிப்பில் இருந்த அன்கிட், தற்போது ரத்த புற்றுநோய் பாதிப்பிலிருந்து முழுமையாகக் குணமடைந்துள்ளார் என்பது பரிசோதனைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

இந்த தகவல்களை அப்பல்லோ மருத்துவமனை குழந்தைகள் ரத்த புற்றுநோய் சிகிச்சைத் துறை டாக்டர் ரேவதி ராஜ், டாக்டர் ஜோஷ் எம்.ஈசாவ் ஆகியோர் நேற்று தெரி வித்தனர். பேட்டியின் போது ரத்த புற்றுநோய் பாதிப்பிலிருந்து குணமாகியுள்ள அன்கிட், ஸ்டெம் செல் தானம் கொடுத்த ஜினால், தாத்ரி அமைப்பின் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ரகு ராஜகோபால் ஆகியோர் உடன் இருந்தனர்.

SCROLL FOR NEXT