தமிழகம்

கோவையில் இன்று கருணாநிதி பிரச்சாரம்

செய்திப்பிரிவு

திமுக தலைவர் கருணாநிதி, இன்று மாலை கோவையில் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் கடந்த 26-ம் தேதி நடந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட் டத்தில் தென் சென்னை, மத்திய சென்னை, வடசென்னை திமுக வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி கருணாநிதி பேசினார். இந்நிலையில், தனது பிரச்சார சுற்றுப்பயணத்தை கோவையில் இருந்து இன்று மாலை கருணாநிதி தொடங்குகிறார். அங்குள்ள வ.உ.சி. பூங்கா மைதானத்தில் இரவு 7 மணிக்கு நடக்கும் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கருணாநிதி சிறப்புரையாற்றுகிறார்.

நாளை தெக்களூர், அவிநாசி, திருப்பூர், பெருந்துறை உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்யும் கருணாநிதி, இரவு ஈரோட்டில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். 7-ம் தேதி பள்ளிப்பாளையம், சங்ககிரியில் பிரச்சாரம் செய்துவிட்டு, சேலம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

திமுக எம்.பி. கனிமொழி சென்னையில் இன்று (சனிக்கிழமை) பிரச்சாரம் தொடங்குகிறார். தி.நகரில் இன்றிரவு 7 மணிக்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் கனிமொழி, இரவு 8 மணிக்கு வேளச்சேரியில் பிரச்சாரம் செய்கிறார். நடிகை குஷ்பு, திருச்சியில் இருந்து இன்று பிரச்சாரத்தை தொடங்குகிறார்.

SCROLL FOR NEXT