தண்ணீர் தேங்கியுள்ள 23 குவாரி களில் முறைகேடாக வெட்டி எடுக் கப்பட்ட கிரானைட் கற்களுக்காக உடனே அபராதம் விதிக்கும்படி ஐ.ஏ.எஸ். அதிகாரி உ.சகாயம் யோசனை தெரிவித்துள்ளார். இதன் மூலம் ரூ.5 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக அபராதம் விதிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரி கள் தெரிவித்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் நடந் துள்ள கிரானைட் முறைகேடு குறித்து உ.சகாயம் 4-ம் கட்ட விசாரணை நடத்தி வருகிறார். சனிக்கிழமை இடையபட்டி, கருப் புக்கால், பூலாம்பட்டியிலுள்ள குவாரிகளை பார்வையிட்டார்.
இடையபட்டி சூரியனேந்தல் கண்மாய் 85 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த கண்மாயில் ஒரு சொட்டு தண்ணீர் இல்லை. சாலையில் நின்றபடி கண்மாய் எங்கே என சகாயம் கேட்டதும், கண்மாயில்தான் நிற்கிறீர்கள் என்றனர் அதிகாரிகள்.
இந்த கண்மாயில் எவ்வளவு ஆழத்துக்கு கற்கள் வெட்டப்பட் டது என கேட்டபோது கிராம உதவியாளர் பழனியாண்டி ஒரு ஆள் மட்டம் இருக்கும் என்றார். ஆழத்தை இரும்பு சங்கிலி மூலம் அளந்தபோது 80 அடிக்கும் மேல் இருந்தது. தவறான தகவல் அளித்த கிராம உதவியாளரை பணியிட மாறுதல் செய்ய சகாயம் உத்தரவிட்டார்.
கருப்புக்கால், பூலாம்பட்டியி லுள்ள பிஆர்பி நிறுவன குவாரி கள் கண்மாய், ஓடையை ஆக்கிர மித்து கற்களை வெட்டி எடுத்திருந் தன. இக்குவாரிகளில் விதிமீறி எடுக்கப்பட்ட கற்களுக்கு எவ்வளவு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என சகாயம் கேட்டார். இதற்கு கனிம வளத் துறை உதவி இயக்குநர் ஆறுமுக நயினார் பதில் அளிக் கையில், தண்ணீர் தேங்கியிருப்ப தால் இக்குவாரி மட்டுமின்றி 23 குவாரிகளில் இன்னும் முறை கேடாக வெட்டப்பட்ட கற்களை அளவிட்டு அபராதம் விதிக்கப்படா மல் உள்ளது’ என்றார். முறை கேடு செய்ததாக தகவல் வெளியாக 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் அபராதம் விதிக்காதது ஏன்? தாமதம் குவாரி அதிபர்களுக்கு சாதகமாக அமைந்துவிடாதா? தண்ணீரை வெளியேற்றி அளவெடுக்க ஏற்பாடு செய்யும்படி குவாரி உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும், இதற்கு வாய்ப்பில்லாவிடில், இதர குவாரி மோசடியை அடிப்படையாக வைத்து அபராதத்தை உடனே கணக்கிடவும் சகாயம் உத்தர விட்டார். ஏற்கெனவே ரூ.8 ஆயிரம் கோடிவரை அபராதம் விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது புதிதாக ரூ.5 ஆயிரம் கோடிக்கும்மேல் அபராதம் விதிக்க நேரிடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.