ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் தமாகா போட்டி யிடாது என்று கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பங்கேற்பது தொடர்பாக தமாகா நிர்வாகிகளின் கருத்துகளை கேட்டறிந்தோம். தமிழகத்தில் 2001-ஆம் ஆண்டு முதல் கடந்த 13 ஆண்டுகளில் 21 இடைத்தேர்தல்கள் நடந்திருக்கின்றன. இதில், 2001-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை 5 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல்களிலும், 2006 முதல் 2011 வரை நடந்த 11 இடைத்தேர்தல்களிலும், 2011 முதல் தற்போது வரை நடந்த 5 இடைத்தேர்களிலும் ஆளுங்கட்சி யினர்தான் வெற்றி பெற்றுள்ளனர்.
இடைத்தேர்தல் என்பது ஆளு கின்ற கட்சியின் செயல்பாட்டை கணிக்கின்ற தேர்தலாக இருந்த காலம் போய், ஆளுங்கட்சிதான் வெற்றி பெற முடியும் என்ற நிலை தமிழ்நாட்டில் உருவாகியுள்ளது. தமிழக இடைத்தேர்தல்களில், “வாக்காளர்களை சந்திப்பது” என்பதற்கு பதிலாக “வாக்கு களுக்கு விலைபேசுவது” என் கின்ற வழிமுறையே அரங்கேறி இருக்கிறது.
தேர்தல்களில் பணபலம், ஆள்பலம், அதிகாரபலம் போன் றவை வெற்றி தோல்வியை நிர்ணயிக்காமல் அரசியல் கட்சிகளின் லட்சியங்களும், கொள்கைகளும், வேட்பாளர்களின் தகுதியும் மட்டுமே வெற்றி தோல்வியை நிர்ணயிக்க வேண்டும் என்று தமாகா கருதுகிறது.
மேலும் தமாகா தொடங்கி 2 மாதங்களே ஆகியுள்ள நிலையில் உறுப்பினர் சேர்க்கையிலும், கட்சியின் வலிமையை பெருக்குவதிலும் மற்றும் 2016 பொதுத் தேர்தலை கருத்தில் கொண்டும் எங்கள் இயக்கப் பணி நடக்கிறது. இடைத் தேர்தல்களில் அரசியல் கட்சிகள் பங்கேற்காமல் இருப்பது என்பது புதிதல்ல. எனவே ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் தமாகா பங்கேற்பது இல்லை என்ற முடிவை எடுத்துள்ளோம்.
இவ்வாறு வாசன் கூறியுள்ளார்.