தமிழகம்

சென்னை தீவுத்திடலில் இன்று சுற்றுலா பொருட்காட்சி தொடங்கியது

செய்திப்பிரிவு

தமிழக அரசின் 41-வது சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி இன்று தொடங்கியது. தொடர்ந்து 70 நாட்கள் நடைபெற உள்ள இப்பொருட்காட்சிக்கான நுழைவுக் கட்டணம் பெரியவர்களுக்கான கட்டணம் 15 ரூபாயில் இருந்து 20 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சிறியவர்களுக்கு 10 ரூபாய் கட்டணம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பொருட்காட்சியின் சிறப்பாக, அமர்நாத் பனிலிங்கத்தைக் கண் முன் நிறுத்தும் விதமாக தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது. இப்பொருட்காட்சியை 13 லட்சம் பேர் பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

புறநகரில் இருந்து மக்கள் தீவுத்திடலுக்கு வருவதற்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அரங்குகள் அமைக்கும் பணி இன்னும் முழுமையடையாததால் ஒரு வாரத்திற்கு மட்டும் எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.

          
SCROLL FOR NEXT