கேரள மாநிலம் அட்டப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் மாவோயி ஸ்டுகள் தாக்குதல் அதிகரித்து வருவதால், அவர்கள் தமிழ கத்தினுள் நுழையாமல் இருக்க, எல்லைப் பகுதியில் உள்ள வனங் களில் காவல்துறை மற்றும் வனத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த இரு மாதங்களாக தமிழக எல்லையை ஒட்டியுள்ள கேரள மாநிலம் அட்டப்பாடி, வயநாடு ஆகிய பகுதிகளில் மாவோ யிஸ்டுகள் நடமாட்டம் அதிகரித் துள்ளன. அவர்கள் வனத்துறை அலுவலகங்களை சூறையாடி தீ வைத்துள்ளனர். இந்நிலையில், கேரள மாநில எல்லையில் உள்ள நீலகிரிக்குள் மாவோயிஸ்டுகள் ஊடுருவ வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மஞ்சூர் அருகேயுள்ள முள்ளி வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருந்துள்ளது.
நீலகிரி காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார், முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் சந்திரன் அடங்கிய குழுவினர், முதுமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட கார்குடியில் இருந்து கூகுல் நாரதி வழியாக மூன்று மாநில எல்லை வரை சுமார் 35 கி.மீ., தூரம் தேடுதல் வேட்டை நடத்தினர்.
கூடலூர் துணைக் கண்காணிப் பாளர் கோபி தலைமையில் மசினகுடி காவல் மசினகுடி ஆய்வாளர் ஓம்பிரகாஷ் அடங்கிய மற்றொரு குழுவினர், கார்குடி ஒன்னாரெட்டி வழியாக மூன்று மாநில எல்லை வரை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
உதகை ஊரக துணைக் கண்காணிப்பாளர் குமார் தலை மையில் மஞ்சூர் ஆய்வார் தங்கவேல், தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படை ஆய்வாளர் பாலச் சந்திரன் அடங்கிய மூன்றாவது குழுவினர், எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கேரிங்டன், மட்டாஸ், தனியாகண்டி, கிண்ணக்கொரை, காமராஜர் நகர், இந்திரா நகர், ஜே.ஜே.,நகர், இரியசீகை வழியாக வன கண்காணிப்பு கோபுரம் வரை தேடுதல் வேட்டை நடத்தினர்.
இதில், நீலகிரி மாவட்ட எல்லையோர கிராமங்களில் அந்நியர்களின் நடமாட்டம் ஏதும் இல்லை என உறுதி செய்யப்பட்டது. எனினும், இதுபோன்ற தேடுதல் வேட்டைகள் தொடர்ந்து நடத்தப்படும் என காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.