தமிழகம்

நிர்வாகிகளை மாற்ற விளக்கம் கேட்கப்படாது: பொதுக் குழுவில் ஸ்டாலின் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

சரியாக செயல்படாத நிர்வா கிகளை மாற்றுவதற்கு எந்த விளக் கமும் கேட்கப்படாது என்று திமுக பொதுக் குழுவில் பொருளா ளர் மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார்.

திமுக பொதுக் குழு கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. இதில், ஸ்டாலினை பொருளாளராக்க 603 பேர் முன்மொழிந்தும், வழி மொழிந்தும் இருந்தனர். எனவே, தேர்தல் அதிகாரியாக செயல்பட்ட சற்குண பாண்டியன், ஸ்டாலினை கட்சியின் பொருளாளராக அறிவித்தார்.

பொருளாளராக தேர்வு செய்யப்பட்ட ஸ்டாலின், சிறப்புத் தீர்மானம் உட்பட 4 தீர்மானங்களை வாசித்தார். இதையடுத்து, மாவட்டச் செயலர்கள், முன்னாள் அமைச்சர்கள், புதிதாக தேர்வு செய்யப்பட்ட துணைப் பொதுச் செயலர்கள், முதன்மைச் செயலர் துரைமுருகன் ஆகியோர் ஏற்புரை வழங்கினர்.

பொதுக் குழுவில் ஸ்டாலின் பேசியதாவது: கட்சியின் பொரு ளாளராக தேர்வு செய்யப்பட்டுள் ளதற்கு நன்றி. திமுக உட்கட்சி தேர்தல் நடந்தபோது, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மகளிரணி, மாணவரணி, கிளைச் செயலர்கள், ஊராட்சி செயலர்கள் என கட்சியின் அனைத்து நிலையின ரையும் சந்தித்து ஆய்வு மேற் கொண்டேன்.

அப்போது, மாவட்டச் செயலர்களுக்கும், ஒன்றிய மற்றும் நகரச் செயலர்களுக்கும் இடையே நல்ல உறவு இருப்பது புரிந்தது. ஆனால், ஒன்றியச் செயலர்கள், நகரச் செயலர்கள் ஆகியோர் கிராம கிளைக் கழகச் செயலர்களுடனும், ஊராட்சி செயலர்களுடனும் நல்ல தொடர்பில் இல்லாமல் இருப்பது தெரிய வந்தது. இந்த நிலை மாற வேண்டும்.

திமுகவின் சட்டத்திட்டத்தின் படி, மாதம் ஒருமுறையாவது ஒன்றிய அளவிலான கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். திமுக ஆட்சி அமைக்க வேண்டு மென்றால், கட்சியை பலப்படுத்த வேண்டும்.

தலைமைக் கழகத்தில் பல் வேறு பிரிவுகளும் அதற்கான நிர் வாகிகளும் உள்ளனர். அவர்களை மாவட்டங்களுக்கு அழைத்துச் சென்று கூட்டங்களையும் ஆய்வுக ளையும் நடத்த வேண்டும்.

சரியாக கட்சிப் பணியாற்றாத நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கட்சியில் ஒருவர் தவறாகச் செயல்பட்டார் என்றால், அவரை நீக்க வேண்டிய சூழல் உருவானால் அவரிடம் விளக்கம் கேட்கப்படும்.

அதே நேரத்தில், பொறுப்பில் உள்ள நிர்வாகி ஒழுங்காகச் செயல்படவில்லை என்றால், அவரை மாற்றுவதற்கு எந்த விளக்கமும் கேட்கப்படாது. அவருக்குப் பதிலாக புதிய பொறுப்பாளர் உடனடியாக நியமிக்கப்படுவார் என்றார் ஸ்டாலின்.

SCROLL FOR NEXT