தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவ மனை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதற்காக மத்திய குழுவினர் விரைவில் வர உள்ளனர் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா தெரிவித்தார்.
மாநில சுகாதார நிலைமை குறித்த ஆய்வுக்கூட்டம், சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று மாலை நடந்தது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜய பாஸ்கர், செயலாளர் ஜெ.ராதா கிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
ஆய்வுக்கூட்டத்துக்கு பிறகு, நிருபர்களிடம் அமைச்சர் ஜெ.பி.நட்டா கூறியதாவது: தமிழகத் தில் சுகாதாரத்தை மேம்படுத்த அரசு எடுத்து வரும் நடவடிக் கைகள் திருப்தி அளிக்கும் வகையில் உள்ளன. தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்உதார ணமாக திகழ்கிறது. அதற்காக தமிழக அரசை பாராட்டியே ஆக வேண்டும். பிரசவத்தின்போது தாய் மற்றும் சேய் இறப்பு சதவீதம் மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் குறைவாக உள்ளது. இதை மேலும் குறைக்க தேவை யான நிதி அளித்திருக்கிறோம்.
உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், அசாம், பிஹார் மற்றும் தமிழகத்தில் ஜப்பானிய மூளைக் காய்ச்சல் தாக்கம் சற்று அதிகமாக உள்ளது. அதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானிய மூளைக் காய்ச்சலுக்கு 93 சதவீதத்துக்குமேல் தடுப்பு மருந்துகள் உள்ளன. அதனால் யாரும் பயப்பட வேண்டாம்.
பச்சிளம் குழந்தைகள் இறப்பைத் தடுக்க மத்திய அரசின் முழு நிதியுதவியுடன் மதுரை, திருவாரூர், விழுப்புரம், கரூர், தஞ்சாவூர் ஆகிய 5 இடங்களில் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு அமைக்கப்பட உள்ளது. தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற் கான கோரிக்கை வந்துள்ளது. அதற்கான இடத்தை தேர்வு செய் வதற்காக மத்தியக் குழுவினர் விரைவில் வரஉள்ளனர்.
தமிழகத்தில் முதியோர்களுக் கான தேசிய பாதுகாப்பு மையம் (மருத்துவமனை) அமைப்பதற் காக நிதி வழங்கப்பட்டுள்ளது. அந்த மையம் விரைவில் அமைக் கப்படும். அதே போல புற்றுநோய் மையமும் (மருத்து வமனை) விரைவில் அமைக் கப்படும். அதற்கான நிதியும் ஒதுக் கப்பட்டுள்ளது. முக்கிய மருந்து களின் விலையை குறைப்பதே மோடி அரசின் தலையாய கடமை யாகும். ஆந்திரம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு உள்ளது. நம்மிடையே தரமான மருத்துவமனைகள் இருக்கின்றன. அதனால் முன்னெச்சரிக்கையாக மட்டும் இருக்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் நட்டா கூறினார்.