சென்னையில் வாக்காளர்களின் எண்ணிக்கை 38 லட்சமாக உயர்ந் துள்ளது. ஒரே ஆண்டில் 1.98 லட்சம் பேர் புதிதாக சேர்ந் துள்ளனர்.
தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. சென்னை ரிப்பன் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், மாநகர வாக் காளர்கள் பட்டியலை அங்கீகரிக் கப்பட்ட அரசியல் கட்சி பிரதி நிதிகள் முன்னிலையில் மாநக ராட்சி ஆணையர் விக்ரம் கபூர் வெளியிட்டார்.
கடந்த ஆண்டு ஜனவரியில் வெளியிடப்பட்ட இறுதி வாக் காளர் பட்டியலில் சென்னை மாநகர பகுதிகளில் 36 லட்சத்து 36 ஆயிரத்து 199 வாக்காளர்கள் இருந்தனர். இது தற்போது 38 லட்சத்து 34 ஆயிரத்து 388 ஆக உயர்ந்துள்ளது. இதில் 19 லட்சத்து 11 ஆயிரத்து 714 ஆண் வாக்காளர்களும், 19 லட்சத்து 21 ஆயிரத்து 905 பெண் வாக்காளர்களும், 769 இதர வாக்காளர்களும் இடம்பெற்றுள் ளனர். கடந்த அக்டோபரில் வெளி யிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலுடன் ஒப்பிடுகையில், தற்போது 57 ஆயிரத்து 922 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். கடந்த ஓராண்டில் மட்டும் 1.98 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்ந்துள்ளனர்.
வேளச்சேரியில் அதிகம்
சென்னையில் உள்ள 16 சட்டப் பேரவைத் தொகுதிகளில் துறை முகம் தொகுதியில்தான் மிகக் குறைவாக 1 லட்சத்து 81 ஆயிரத்து 586 வாக்காளர்கள் உள்ளனர். 2 லட்சத்து 85 ஆயிரத்து 629 வாக்காளர்களுடன் வேளச்சேரி தொகுதி முதலிடத்தில் உள்ளது.
கடந்த அக்டோபரில் வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தமுறை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அளிக்கப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் 1,569 வாக்காளர் களின் பெயரும், தகுதியின்மை அடிப்படையில் 44 ஆயிரத்து 3 வாக்காளர்களின் பெயரும் பட்டிய லில் இருந்து நீக்கப்பட்டன. 1 லட்சத்து 3 ஆயிரத்து 494 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப் பட்டுள்ளனர். இதில், 18 வயது பூர்த் தியான முதல்முறை வாக்காளர்கள் 25 ஆயிரத்து 407 பேர் ஆவர்.