தமிழகம்

வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் மருத்துவர்கள் மீது வழக்கு: தவறான சிகிச்சையால் பெண் இறந்ததாக புகார்

செய்திப்பிரிவு

தவறான சிகிச்சையால் பெண் இறந்தது தொடர்பான புகாரில் மருத்துவர்கள் 3 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த செலம்பன் குட்டை பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி சுமதி(38) வயிற்றுவலி காரணமாக ஈரோடு - பெருந்துறை சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சுமதி அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து நேற்று முன்தினம் காலை சுமதி இறந்துள்ளார். மருத்துவமனை நிர்வாகம் அளித்த தவறான சிகிச்சை காரணமாகவே சுமதி இறந்தார் என குற்றஞ்சாட்டிய முருகன் மற்றும் அவரது உறவினர்கள் மருத்துவமனை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். முருகனுக்கு ஆதரவாக அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன.

இதுகுறித்து முருகன் வீரப்பன் சத்திரம் காவல்துறையில் புகார் அளித்தார். அதில், என் மனைவிக்கு அறுவை சிகிச்சை மேற் கொண்டதில் மருத்துவர்கள் தவறு செய்துள்ளனர். இதன் காரணமாகவே அவர் இறந் துள்ளார். இதுகுறித்து நியாயம் கேட்டபோது, மருத்துவர்கள் அலட்சியமாகவும், பொறுப் பற்ற முறையிலும், சாதியை குறிப்பிட்டு இழிவுபடுத்தியும் பதில் அளித்தனர். என் மனைவியின் இறப்புக்குக் காரணமான மருத்து வமனை நிர்வாகம் மற்றும் மருத்து வர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக, மருத்துவ மனையில் பணியாற்றும் செந்தில்வேல், அருள், கவுரிசங்கர் ஆகிய மூன்று மருத்துவர்கள் மீது அஜாக்கிரதையால் ஏற்படும் மரணம் (304 (ஏ), ஆதிதிராவிடர் என்பதால் சரியாக சிகிச்சை அளிக்க வில்லை என்ற குற்றச்சாட்டுக்காக வன்கொடுமை தடுப்பு சட்டம், ஆதிதிராவிடர் பழங்குடியினர் சட்டம் (3 (1) ) ஆகிய பிரிவுகளில் வீரப்பன்சத்திரம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக தனியார் மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் செந்தில்வேலிடம் பேசியபோது, ஒட்டுகுடல் வெடிப் புக்காகவும், சினை முட்டை பை ரத்தக் கசிவுக்காகவும் ஆபத்தான நிலையில் வந்த நோயாளி சுமதிக்கு எங்கள் மருத்துவமனை யில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு ஏற்கெனவே வயிற்று பகுதியில் இரு அறுவை சிகிச்சை கள் நடந்துள்ளது. இந்த அறுவை சிகிச்சையின்போது இயல்பான உடல் நலிவு காரணமாக அவர் இறந்தார். எங்கள் தரப்பில் தவறு எதுவும் இல்லை. இதற்கு தேவையான மருத்துவ ஆவணங்கள் உள்ளன என்றார்.

இதுகுறித்து இந்திய மருத்துவ சங்க முன்னாள் மாநிலத் தலைவர் சுகுமார் கூறும்போது, ‘அறுவை சிகிச்சையின்போது தொற்று ஏற்படுமானால், மீண்டும் ஒருமுறை சிகிச்சை செய்வது மருத்துவத்துறையில் வழக்க மான நடைமுறைதான். இதில் நோயாளியின் உடல்நிலை, நோயின் தீவிரம் இதற்கேற்ப சிகிச்சையளிக்கப்படுகிறது. இதுபோன்ற மரணங்கள் ஏற்படும் போது, மருத்துவர்களை குற்றவாளியாக்கி விடுகின்றனர். இது போன்ற பிரச்சினைகள் தொடர்பான வழக்கில் மருத்து வர்கள் மீது தவறில்லை என்பதுதான் இறுதி முடிவாக பல வழக்குகளில் வந்துள்ளது.

அதே நேரத்தில் மருத்துவர்கள் மீது வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்திருப்பது அதிர்ச்சியளிக்கி றது. மருத்துவர்கள் யாரும் ஜாதி பார்த்து சிகிச்சையளிப்பதில்லை. மருத்துவர்களுக்கு இதுபோன்ற நெருக்கடியை ஏற்படுத்துவது வருத்தமளிக்கிறது’ என்றார்.

SCROLL FOR NEXT