தமிழகம்

சென்னை அருகே பஸ் விபத்தில் கல்லூரி மாணவி பலி; 12 பேர் காயம்

டி.மாதவன்

சென்னை அருகே பேருந்து ஒன்று கவிழ்ந்த விபத்தில் 21 வயது கல்லூரி மாணவி பலியானார். மேலும் 12 பேர் காயமடைந்தனர்.

மதுரவாயல்-பெருங்களத்தூர் பை-பாஸ் சாலையில் சென்னையிலிருந்து சேலம் நோக்கி அந்தப் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது திருநீர்மலை என்ற இடத்தில் இரு சக்கர வாகனத்தின் மீது மோதுவதைத் தவிர்க்கும் முயற்சியில் பேருந்து கட்டுப்பாடு இழந்து சாலையில் தாறுமாறாகச் சென்று கவிழ்ந்தது, என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதில் துறையூரைச் சேர்ந்த சத்யதர்ஷிணி என்ற பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 12 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் குரோம்பேட்டையில் உள்ள தாம்பரம் தாலுகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேருந்து ஓட்டுநர் ரங்கநாதன் (42) படுகாயமடைந்ததாகவும், நடத்துநர் ஜெய்சங்கர் (40) தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

தாம்பரம் போக்குவரத்துக் காவல் விசாரணைப் பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT