தமிழகம்

தொழிலாளர்களின் வேலை பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: அரசுக்கு சிஐடியு கோரிக்கை

செய்திப்பிரிவு

தொழிற்சாலைகளில் தொழிலாளர் களின் வேலை பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: தொழில் துறையில் தொழிலாளர்களின் வேலை பாதுகாப்பு கடும் தாக்குத லுக்கு ஆளாகியுள்ளது. தொழி லாளர்களை வேலையில் இருந்து துரத்துவது நோயாக பரவி வரு கிறது. நோக்கியா, பிஓய்டி ஆகிய எலக்ட்ரானிக் தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டன. ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை மூடுதல் அறி விப்பை செய்துவிட்டது. பிளக்ட் ரானிக், சான்மினா போன்ற தொழிற் சாலைகளில் ஆள்குறைப்பு செய் யப்படுகின்றன. மொத்தத்தில் 25 ஆயிரம் பேர் வேலை இழந்து விட்டனர். இவர்களின் ஆண்டு ஊதிய இழப்பு ரூ.300 கோடி.

டாடா கன்சல்டன்சி என்ற பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் 25 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை என்கிறது. அதேவேளையில் 50 ஆயிரம் புதியவர்களை வேலைக்கு எடுப்போம் என்கிறது. தற்போது உள்ளவர்களை வெளியேற்றிவிட்டு, மலிவான ஊதியத்தில் இளம்பட்டதாரிகளை வேலைக்கு எடுப்பதே இதன் நோக்கம்.

என்விஹெச் இந்தியா என்ற ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி தொழிற்சாலையில் சங்கம் அமைத்து ஊதிய உயர்வு கேட்கும் தொழிலாளர்களை கூண்டோடு வெளியேற்றிவிட்டு புதியவர்களை நியமிக்க அந்த நிர்வாகம் முயற்சிக்கிறது.

இதுபோன்ற செயல்கள் வன்மையான கண்டனத்துக் குரியது. மத்திய, மாநில அரசுகள் மேலும் வேடிக்கை பார்க்காமல் கான்ட்ராக்ட், கேஷுவல் வேலை முறைகளை ஒழிக்கவும், தொழி லாளர்களின் வேலை பாதுகாப்பை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT