மதுகுமாரி, சதீஷ்குமார், ராஜ்ஸ்ரீ ரகுநாத்
சென்னை: மத்திய உள்துறை அமைச்சரின் திறன் விருதுக்கு தமிழகத்தைச் சேர்ந்த 3 காவல் மற்றும் தடய அறிவியல் அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
காவல் துறையினரின் சிறப்பான பணிகளை அங்கீகரித்து, அவர்களின் மன உறுதியையும் ஊக்கத்தையும் அதிகரிக்கும் நோக்கில் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் கடந்த 2024-ம் ஆண்டு ‘மத்திய உள்துறை அமைச்சரின் திறன் விருது’ உருவாக்கப்பட்டது.
சிறந்த செயல்பாடுகள், புலனாய்வில் சிறப்பான சேவை, துணிச்சலான உளவுப் பணி மற்றும் தடய அறிவியல் துறையில் அரசு விஞ்ஞானிகளின் குறிப்பிடத்தக்க பங்களிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விருது வழங்கப்படுகிறது. அதன்படி, சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்த தினமான நேற்று, 2026-ம் ஆண்டுக்கான விருது பெறுவோர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதில் தமிழகத்தைச் சேர்ந்த உதவி காவல் கண்காணிப்பாளர்கள் மது குமாரி, வி.சதீஷ்குமார் மற்றும் தடய அறிவியல் துறை துணை இயக்குநர் ராஜ்ஸ்ரீ ரகுநாத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த மொத்தம் 490 பணியாளர்களுக்கு இந்த ஆண்டு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மதுகுமாரி மதுரை தமிழ்நாடுசிறப்புக் காவல் படை 6-வதுஅணியின் தளவாயாகவும், சதீஷ்குமார் திருவாரூர் காவல் கண்காணிப்பாளராகவும் பணியாற்றுகின்றனர்.