சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு: எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெறும் மறுசீரமைப்பு பணி காரணமாக, விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி 3 ரயில்கள் சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும். சென்னை கடற்கரை - மும்பை சிஎஸ்எம்டி அதிவிரைவு ரயில் பிப்.4-ம் தேதிமுதல் ஏப்.4-ம் தேதிவரை சென்னை கடற்கரையிலிருந்து இயக்கப்படும். சென்னை கடற்கரை - ஐதராபாத் சார்மினார் அதிவிரைவு ரயில் பிப்.4-ம் தேதிமுதல் ஏப்.
5-ம் தேதிவரை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும். ஐதராபாத் -சென்னை கடற்கரை சார்மினார் அதிவிரைவு ரயில் பிப்.3-ம் தேதி முதல் ஏப்.4-ம் தேதிவரை கடற்கரை ரயில் நிலையத்தை அடையும்.