அரளிப்பாறை மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளை.

 
தமிழகம்

அரளிப்பாறை மஞ்சுவிரட்டில் மாடு முட்டி 3 பேர் உயிரிழப்பு

இ.ஜெகநாதன்

சிங்கம்புணரி: சிவகங்கை மாவட்​டம் சிங்​கம்​புணரி அருகே அரளிப்​பாறை மஞ்​சு​விரட்​டில் மாடுகள் முட்​டிய​தில் வடமாநில ஐஸ் வியா​பாரி உள்பட 3 பேர் உயி​ரிழந்​தனர். 95 பேர் காயமடைந்​தனர்.

சிங்​கம்​புணரி அருகே அரளிப்​பாறை​யில் சிறிய குன்​றின் மீது குன்​றக்​குடி ஆதீன மடத்​துக்​குட்​பட்ட பால தண்​டா​யுத​பாணி சுவாமி கோயில் உள்​ளது. 5 நிலை நாட்​டார்​களுக்கு பாத்​தி​யப்​பட்ட இந்​தக் கோயி​லில், ஆண்​டு​தோறும் மாசிமகத் திரு​விழா​வின் 10-ம் நாளில் மஞ்​சு​விரட்டு விமரிசையாக நடை​பெறும்.

          

இதை முல்லைமங்கலம், சதுர்​வேதமங்​கலம், கண்​ணமங்​கலம், சீர்​சேர்ந்​த மங்​கலம், வேழமங்​கலம் ஆகிய 5 நிலை நாட்​டார்​கள் சேர்ந்து 200 ஆண்​டு​களுக்​கும் மேலாக நடத்தி வரு​கின்​றனர்.

அதன்​படி, நேற்று கோயி​லில் சிறப்பு வழி​பாடு முடிந்து மஞ்​சு​ விரட்டு திடலுக்கு நாட்​டார்​கள் ஊர்​வல​மாக வந்​தனர். பின்​னர் கோயில் காளை​களுக்கு மரி​யாதை செலுத்​தி​யதும் மற்ற காளை​களுக்கு வேட்​டி, துண்​டு​கள் அணி​வித்​தனர்.

தொடர்ந்து சிவகங்கை, திண்​டுக்​கல், தேனி, புதுக்​கோட்​டை, மதுரை, திருச்சி உள்​ளிட்ட மாவட்​டங்​களைச் சேர்ந்த 128 காளை​கள் அவிழ்த்துவிடப்​பட்​டன. 70-க்​கும்மேற்​பட்ட மாடுபிடிவீரர்கள் பங்​கேற்​றனர்.

அவர்​கள் சீறிப்​பாய்ந்த காளை​களை அடக்க முயன்​றனர். இதை ஆயிரக்​கணக்​கானோர் ரசித்​தனர். முன்​ன​தாக ஆங்​காங்கே வயல்​வெளி​களில் கட்டுமாடுகளாக 500-க்​கும் மேற்​பட்ட காளை​கள் அவிழ்க்​கப்​பட்​டன.

மாடுகள் முட்​டிய​தில் புதுக்​கோட்டை மாவட்​டம் அரப்​பன்​வயலைச் சேர்ந்த சுந்​தர்​ராஜன் (34), மதுரை மாவட்​டம், மேலூர் அருகே நாட்​டார்​மங்​கலத்​தைச் சேர்ந்த ராம​நாதன் (23), ஐஸ் வியா​பாரி​யான ராஜஸ்​தானைச் சேர்ந்த ஜமால்​லால் ஜி (55) ஆகிய மூவர் உயி​ரிழந்​தனர். 95 பேர் காயமடைந்​தனர்.

படு​காயமடைந்த 18 பேர் மேல்​சிகிச்​சைக்​காக சிவகங்​கை, சிங்​கம்​புணரி அரசு மருத்​து​வ​மனை​களுக்​குக் கொண்டு செல்​லப்​பட்​டனர். சிங்​கம்​புணரி வட்​டாட்​சி​யர் நாக​நாதன் தலை​மையி​லான அதி​காரி​கள் ஏற்​பாடு​களை கண்​காணித்​தனர். 200-க்​கும் மேற்​பட்ட போலீ​ஸார் பாது​காப்​புப் பணி​யில் ஈடு​பட்​டனர்.

SCROLL FOR NEXT