தமிழகம்

வாக்காளர் பட்டியலில் திருத்தம் கோரி 35 லட்சம் பேர் விண்ணப்பம்: பெயர் சேர்ப்பதற்கான அவகாசம் நிறைவு

பிப்.17-ம் தேதி இறுதி பட்டியல் வெளியீடு

செய்திப்பிரிவு

சென்னை: வாக்​காளர் பட்​டியலில் பெயர் சேர்க்க அவகாசம் நிறைவடைந்த நிலை​யில், பெயர் சேர்க்க, திருத்​தங்கள் செய்யக்கோரி இது​வரை 34.75 லட்​சம் பேர் விண்​ணப்பித்​துள்​ளனர். பிப்​.17-ம் தேதி இறுதி வாக்​காளர் பட்​டியல் வெளி​யிடப்பட உள்​ளது.

தமிழகம் முழு​வதும் வாக்​காளர் பட்​டியலில் சிறப்பு தீவிர திருத்​தம் மேற்​கொள்​ளப்​பட்டு வருகிறது. இதில் உயிரிழந்த வாக்காளர்கள், முகவரி மாறிய​வர்கள், உரிய ஆவணங்​கள் இல்​லாதவர்​கள் உள்ளிட்டோரின் பெயர்கள் நீக்​கப்​பட்டு வரைவு வாக்​காளர் பட்​டியல் கடந்த டிச.19-ம் தேதி வெளி​யிடப்​பட்​டது.

          

தமிழகத்​தில் கடந்த அக்​.27-ம் தேதி நில​வரப்படி, 6.41 கோடி வாக்​காளர்​கள் இருந்​தனர். ஆனால் வரைவு வாக்​காளர் பட்​டியலில் 5.43 கோடி பேர் மட்​டுமே இடம்​பெற்​றிருந்​தனர். மொத்​தம் 97.37 லட்​சம் வாக்களர்களின் பெயர்​கள் நீக்​கப்​பட்​டன.

இந்​நிலை​யில், வரைவு வாக்​காளர் பட்​டியல் வெளி​யிடப்​பட்ட டிச.19 முதல் ஜன.30-ம் தேதி வரை வாக்​காளர் பட்​டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்வதற்கான அவகாசம் வழங்​கப்​பட்​டது. இதில் பெயர் சேர்க்க 17.10 லட்​சம் பேரும் நீக்கம் செய்யக் கோரி 1.84 லட்​சம் பேரும் திருத்​தம் கோரி 5.51 லட்​சம் பேரும் என மொத்​தம் 24.47 லட்​சம் வாக்காளர்கள் அதற்குரிய படிவங்​களை பூர்த்தி செய்து வழங்​கி​யிருந்​தனர்.

இதே கால​கட்​டத்​தில் இணை​யவழி​யில் வாக்​காளர் பட்​டியலில் பெயர் சேர்க்க 5.74 லட்​சம், நீக்​கல் கோரி 15,935, திருத்​தம் கோரி 4.38 லட்​சம் என 10.28 லட்​சம் பேர் விண்​ணப்​பித்​திருந்​தனர். ஆக மொத்​தம் 34 லட்​சத்து 75,717 பேர் விண்​ணப்​பித்​திருந்​தனர். இந்த விண்​ணப்​பங்​கள் வாக்​காளர் பதிவு அலு​வலர்​கள் மூலம் சரி​பார்க்​கப்​பட்டு வரு​கிறது.

இதற்​கிடையே, இறுதி வாக்​காளர் பட்​டியல் பிப்​.17-ம் தேதி வெளி​யாக உள்​ள​தாக தமிழக தலை​மைத் தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் தெரி​வித்​துள்​ளார்.

தொடர்ந்து விண்​ணப்​பிக்​கலாம்: வாக்​காளர் பட்​டியலில் பெயர் சேர்க்க அவகாசம் முடிவடைந்​தா​லும், 18 வயது பூர்த்​தி​யானவர்​கள் தொடர்ந்து விண்​ணப்​பிக்​கலாம். வாக்​காளர் பட்​டியலில் திருத்​தம் கோரி​யும் விண்ணப்​பிக்​கலாம். இவர்​களின் பெயர்​கள் இறுதி வாக்​காளர் பட்​டியலில் இடம்​பெறாது. ஆனால் சட்​டப்​பேரவை தேர்​தலின்​போது துணைப் பட்​டியலில் சேர்க்​கப்​படும். எனவே, இத்​தேர்​தலில் அவர்​கள் வாக்​களிக்க முடி​யும் என தலை​மை தேர்​தல்​ அதி​காரி அலு​வல​கம்​ தெரிவித்​துள்​ளது.

SCROLL FOR NEXT