தமிழகம்

கோட்சேவை தேசபக்தராக்கும் முயற்சியைக் கண்டித்து ஜன.30-ல் எஸ்டிபிஐ போராட்டம்

செய்திப்பிரிவு

கோட்சேவை தேசபக்தராகும் முயற்சியைக் கண்டித்து நாடு முழுவதும் ஜன.30-ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சி அறிவித் துள்ளது.

அக்கட்சியின் மாநில செயற் குழுக் கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது. கட்சியின் மாநிலத் தலைவர் தெகலான் பாகவி, மாநில பொதுச்செயலர்கள் முபாரக், நிஜாம் முகைதீன், அப்துல் ஹமீது, துணை தலைவர் ரபீக் அகமது, பொருளாளர் அம்ஜத் பாஷா, திருச்சி மாவட்ட தலைவர் ரகமதுல்லா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட முக்கிய தீர்மானங்கள்:

காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவை தேசபக்தராக்கும் முயற்சிக்கு எதிராக மாபெரும் போராட்டத்தை மகாத்மா காந்தியின் 67-ம் ஆண்டு நினைவு தினமான ஜனவரி 30 அன்று நாடு முழுவதும் நடத்துவது. அரசின் பலதுறைகளிலும் தலை விரித்தாடும் லஞ்சம், ஊழலுக்கு எதிராக மார்ச் மாதம் மாபெரும் பிரச்சார இயக்கத்தை நடத்துவது.

பன்னாட்டு தனியார் முதலாளி களுக்கு இந்திய விவசாயிகளின் விளைநிலங்களை சட்டப் பூர்வமாக பறித்து தாரை வார்க்க வசதியாக நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தை பாஜக அரசு திரும்பப்பெற வேண்டும். காவிரி டெல்டா பகுதிகளை பாலை வனமாக்கும் திட்டமான மீத்தேன் எரிவாயு திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.

SCROLL FOR NEXT