சென்னை விமான நிலையத்தின் பன்னாட்டு முனைய கார் நிறுத்தும் பகுதியில் நேற்று காலை ஒரு அட்டைப் பெட்டி இருந்தது. அந்த பெட்டி ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அங்கு இருந்ததால் அதில் வெடிகுண்டு இருக்குமோ என்ற பீதி பயணிகளிடையே ஏற்பட்டது.
இது தொடர்பாக விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீஸார் மோப்ப நாய்களுடன் வந்து சோதனை நடத்தியபோது அட்டைப் பெட்டிக்குள் துணிகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து விமான நிலைய அதிகாரிகளிடம் அந்த அட்டைப் பெட்டியை போலீஸார் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.