தமிழகம்

பழநியில் தைப்பூச கொடியேற்றம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்

செய்திப்பிரிவு

பழநி கோயிலில் தைப்பூசத் திரு விழா நேற்று கொடியேற்றத் துடன் கோலாகலமாகத் தொடங் கியது. இந்த திருவிழா பிப்ரவரி 6-ம் தேதி வரை 10 நாள் நடைபெறவுள்ளது.

பழநி அடிவாரம் பெரியநாயகி அம்மன் கோயிலில் நேற்று காலை முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜை கள் நடைபெற்றன. காலை 10 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது.

கோயில் இணை ஆணை யர் ராஜமாணிக்கம், துணை ஆணையர் மேனகா, வேணு கோபால் எம்.எல்ஏ. மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். கொடியேற்று விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தைப்பூசத் திருவிழாவின் ஆறாம் நாளான பிப்.2-ம் தேதி இரவு 7.30 மணிக்கு முத்துகுமாரசுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு வெள்ளித் தேரில் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

ஏழாம் நாளான பிப். 3-ம் தேதி தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைத் தேரோட்டம் நடைபெறவுள்ளது. அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை ஆகியோர் சண்முகா நதிக்கரையில் தீர்த்தவாரிக்கு எழுந்தருள்வர்.

பகல் 11 மணிக்கு தேரேற்றம், சுவாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள், அலங்கார தீபாராதனைகள் நடைபெறும். மாலை 4.35 மணிக்கு அடிவாரம் தேரடி நிலையில் இருந்து தைப்பூசத் தேரோட்டம் தொடங்குகிறது. தேரை பக்தர்கள் வடம்பிடித்து நான்கு ரத வீதிகளில் இழுத்து வருகின்றனர். பிப்ரவரி 6-ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் தெப்போற்சவம் நடக்கிறது.

தைப்பூச விழாவையொட்டி விழாவின் ஒவ்வொரு நாளிலும் அடிவாரம் குடமுழுக்கு அரங்கில் ஆன்மிகச் சொற் பொழிவு நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், பரதநாட்டியம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

SCROLL FOR NEXT