தமிழகம்

அம்மா சிமென்ட் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதி

செய்திப்பிரிவு

விற்பனை தொடங்கிய 15 நாட்களி லேயே அம்மா சிமென்ட்டுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இத னால், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்குகளில் அம்மா சிமென்ட்டுக்கு பதிவு செய்த மக்கள், காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழக மக்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசு மூட்டை ரூ. 190-க்கு அம்மா சிமென்ட் விற்பனையை கடந்த 5-ம் தேதி அறிமுகப்படுத்தியது. தங்கள் பகுதி விஏஓ மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோரிடமிருந்து ஒப்புதல் சான்றிதழும், 1000 சதுர அடிக்கு உட்பட்ட வீடு கட்டுவதற்கான வரைபட ஒப்புதல் நகலும் இணைத்து, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலமாக நுகர் பொருள் வாணிபக் கழகத்தில் அளித்து, அம்மா சிமென்ட் பெற்றுக் கொள்ளும் வகையில் அரசு நடைமுறைகளை அறிவித்துள்ளது.

அதன்படி, கடந்த 5-ம் தேதி தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ், திருச்சி மண்டலத்தில் 5 இடங்களில் அம்மா சிமென்ட் விற்பனை செய்யப்பட்டது. திருச்சி மண்டலத்துக்கு முதற்கட்டமாக 2,169 சிமென்ட் மூட்டைகள் வரப்பெற்றன. அதில், 1950 மூட்டைகள் விற்பனை செய்யப்பட்டதுபோக, எஞ்சிய 219 சிமென்ட் மூட்டைகள் 5 கிடங்குகளில் பிரித்து வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக சிமென்ட் கேட்டு விண்ணப் பித்தவர்களுக்கு சிமென்ட் மூட் டைகள் வழங்கப்படவில்லை. நுகர் பொருள் வாணிபக் கழகத்துக்கு நடையாய் நடந்தும், சிமென்ட் கிடைத்தபாடில்லை.

இதுதொடர்பாக திருச்சி மண்டல நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளரிடம் விசாரித்தபோது, ‘முதற்கட்டமாக 2,169 சிமென்ட் மூட்டைகள் வரப் பெற்றன. அதன் பிறகு சிமென்ட் மூட்டைகள் வரவில்லை. எனவே, பதிவு செய்தவர்களுக்கு சிமென்ட் மூட்டை களை வழங்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் 60-க்கும் அதிகமானோர் சிமென்ட் கேட்டு பதிவு செய்துள்ளனர். சிமென்ட் எப்போது வருகிறதோ அப்போதுதான் வழங்க முடியும்’ என்றார்.

SCROLL FOR NEXT