வட கிழக்கு பருவ மழையின் முடிவில் தமிழகத்தில் சராசரியாக 43 செ.மீ. மழை பெய்துள்ளது.
அக்டோபர் மாதம் தொடங்கிய வடகிழக்கு பருவ மழை டிசம்பர் 31-ம் தேதியுடன் (நேற்று) நிறைவடைந்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை காலத்தின் போது சராசரியாக 44 செ.மீ .மழை பெய்யும். இந்த ஆண்டு சராசரியாக 43 செ.மீ. மழை பெய்துள்ளது.
தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழையின் போது திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை பற்றாக்குறையாக பெய்துள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் சராசரி அளவுக்கு அதிகமாக பெய்துள்ளது. மற்ற மாவட்டங்களில் இயல்பான மழை அளவு பதிவாகியுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக நாகப்பட்டினத்தில்101.6 செ.மீ. மழை பெய்துள்ளது. குறைந்தபட்சமாக கிருஷ்ணகிரியில் 28.94 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.