தமிழகம்

உயரம் குறைவான சாலை தடுப்பு: சாலையில் ஓய்வெடுக்கும் மாடுகளால் விபத்து - ‘தி இந்து’ உங்கள் குரலில் வாசகர் புகார்

செய்திப்பிரிவு

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி-திருவள்ளூர் நெடுஞ்சாலையின் நடுவே, உயரம் குறைவாகவும், அகலம் அதிகமாகவும் அமைக்கப்பட் டுள்ள தடுப்புகளில் மாடுகள் படுத்து உறங்குவதாகவும், அத னால் அடிக்கடி விபத்துகள் நிகழ்வதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து, ‘தி இந்து’-உங்கள் குரல் பகுதி தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்ட கோபிகிருஷ்ணன் என்பவர் தெரி வித்ததாவது: பூந்தமல்லி- திருவள் ளூர் நெடுஞ்சாலை பகுதியில் கடந்த ஓராண்டுக்கு முன், புதிதாக சாலை தடுப்பு அமைக்கப்பட்டது. இதில், திருமழிசை முதல், வெள்ளவேடு வரையிலான 3 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்பட்ட சாலை தடுப்புகள், முக்கால் அடி உயரத்திலும், 3 அடி அகலத்திலும் அமைக்கப்பட்டுள்ளன.

உயரம் குறைவாகவும், அகலம் அதிகமாகவும் உள்ள இந்த சாலை தடுப்புகளில், மாடுகள் படுத்து உறங்குகின்றன. அப்படி படுத்து உறங்கும் மாடுகள், அவ்வப்போது சாலையில் குறுக் கும் நெடுக்குமாக அலைந்து திரிகின்றன. சாலையில் திரியும் மாடுகள், ஹாரன் அடித்தாலும் சாலையிலிருந்து நகர்வதில்லை. இதனால், திருமழிசை பகுதிகளில் தொடர்ந்து விபத்துகள் நிகழ் கின்றன.

இந்த நெடுஞ்சாலையில், திருமழிசையிலிருந்து, திருவள்ளூர் வரை 23 கி.மீ. தூரம் வரை பெரும்பாலான இடங்களில், இரவில் ஒளிரும் சிகப்பு நிற விளக்குகள் அமைக் கப்படவில்லை. இதனாலும், வாகனங்கள் விபத்துக்குள்ளா கின்றன. அரசு பள்ளி உள்ள திருமழிசை, கீழ்மணம்பேடு மற்றும் நேமம் உள்ளிட்ட பகுதிகளில், சாலையில் வேகத்தடைகள் இல்லா ததும் விபத்துகளுக்கு காரண மாகும்’ என்று அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து, நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது: திருமழிசை, வெள்ளவேடு பகுதிகள் மட்டு மல்ல, திருவள்ளூர் நகர் பகுதி களிலும் உயரம் குறைவாகவும், அகலம் அதிகமாகவும் அமைக் கப்பட்டுள்ள சாலை தடுப்புகளில், படுத்து உறங்கும் மாடுகள் அங்குமிங்கும் அலைந்து திரிவ தால், விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.

இதைத் தடுக்க முதல் கட்டமாக, திருவள்ளூர் நகர் பகுதியில் உள்ள சாலை தடுப்புகளின் உயரத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

அதன் பிறகு திருமழிசை முதல், வெள்ளவேடு வரை உள்ள சாலை தடுப்புகளின் உயரத்தையும் அதி கரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பூந்தமல்லி- திருவள்ளூர் நெடுஞ் சாலை பகுதிகளில் ஒளிரும் சிகப்பு விளக்குகள், போதிய வேகத் தடைகள் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT