தமிழகம்

வள்ளலார் நினைவு தினம்: பிப். 3-ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

செய்திப்பிரிவு

வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களுக்கு பிப்ரவரி 3-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு வரும் 3-ம் தேதி சென்னையில் உள்ள அனைத்து சில்லறை விற்பனை டாஸ்மாக் கடைகள் மற்றும் அதனை சார்ந்த பார்கள் மூடப்பட்டு இருக்க வேண்டும். அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது.

இதனை மீறும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT