தமிழகம்

சிமென்ட் விலை உயர்வுக்கு எதிர்ப்பு: தமிழகத்தில் பரவலராக போராட்டம்

செய்திப்பிரிவு

சிமென்ட் விலை உயர்வைக் கண்டித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் தமிழ்நாட்டின் பல இடங்களிலும் ஆர்ப்பாட்டம், பேரணி, போராட்டம் நடைபெற்று வருகிறது.

மயிலாடுதுறை வட்டாசியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் கட்டுமான பொறியாளர் சங்கம் ஈடுபட்டனர். 213 ரூபாய்க்கு விற்கப்பட்ட சிமென்ட் 380 ரூபாய்க்கு விற்கப்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர்.

தஞ்சையில் கட்டிட பொறியாளர் சங்கத்தினர் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருச்செங்கோட்டிலும் கட்டிட பொறியாளர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கும்பகோணம் காந்தி பூங்கா முன் 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை, சேலத்திலும் கட்டுமான பொறியாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

          
SCROLL FOR NEXT