தமிழகம்

காவல்துறை அதிகாரிகள் 24 போலீஸாருக்கு குடியரசு தலைவர் விருது

செய்திப்பிரிவு

உளவுப்பிரிவு தலைவர் கண்ணப்பன் உட்பட தமிழக காவல் துறையை சேர்ந்த 24 பேருக்கு குடியரசு தலைவர் விருது வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு நுண்ணறிவு பிரிவு தலைவர் பெ.கண்ணப்பன், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய கூடுதல் இயக்குநர் சுனில் குமார் சிங், காவல் துறை துணை தலைவர்கள் ஆயுஷ் மணி திவாரி, வித்யா டி.குல்கர்னி, முதல்வர் பாதுகாப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வீரப்பெருமாள், சென்னை ஊழல் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் சிவக்குமார், ஊழல் தடுப்பு பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் ப்ளோரா ஜெயந்தி, விருதுநகர் கூடுதல் கண்காணிப்பாளர் மாடசாமி, கோவை காவலர் பயிற்சி பள்ளி முதல்வர் சிவகுரு, திருநெல்வேலி உதவி ஆணையர் ஸ்டான்லி ஜோன்ஸ்.

மேலும், உளவுப்பிரிவு துணை கண்காணிப்பாளர் ப்ரித்விராஜன், திருச்சி துணை கண்காணிப்பாளர் கென்னடி, திருவள்ளூர் துணை கண்காணிப்பாளர் சிவலிங்கம், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் உதயகுமார், திருவள்ளூர் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு ஆய்வாளர் பொற்செழியன், சென்னை மத்திய குற்றப்புல னாய்வுத்துறை ஆய்வாளர் ஜெகதீஷ், வேலூர் ஊழல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் பழனி, மதுரை மத்திய குற்றப்புலனாய்வுத்துறை ஆய்வாளர் சந்திரசேகரன், சிவகங்கை ஆய்வாளர் மலைச் சாமி, முதல்வரின் பாதுகாப்பு பிரிவு ஆய்வாளர் நடராஜன், சேலம் காவல் ஆய்வாளர் சாவித்ரி, ஈரோடு சிறப்பு அதிரடிப்படை உதவி ஆய்வாளர் குமார், சென்னை ஊழல் தடுப்பு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சின்னராஜூ, அருணாசலம் ஆகிய 24 பேர் குடியரசு தலைவர் விருது பெறுகின்றனர்.

SCROLL FOR NEXT