தமிழகத்தில் நேரடி காஸ் மானிய திட்டத்தின் கீழ் கடந்த பத்து நாட்களில் நுகர்வோரின் வங்கிக் கணக்கில் ரூ. 48.22 கோடியை அரசு முன்பண தொகையாக செலுத்தியுள்ளது.
மத்திய அரசின் நேரடி காஸ் மானிய திட்டம் இந்த மாதம் முதல் நாடுமுழுவதும் அமுல்படுத்தப்பட் டுள்ளது. இந்நிலையில் தமிழகத் தில் நேரடி காஸ் மானிய திட்டம் அமுல்படுத்தப்பட்ட 10 நாட்களில் பாரத், இந்துஸ்தான், இண்டேன் ஆகிய பொதுத்துறை நிறுவனங் களை சேர்ந்த நுகர்வோர்கள் சுமார் 1லட்சத்து 40 ஆயிரம் பேர் புதியதாக நேரடி காஸ் மானிய திட்டத்தில் இணைந்துள்ளனர்.
மாநிலத்தில் பொதுத்துறை நிறு வனங்களின் காஸ்களை பயன் படுத்துவோர் சுமார் 1 கோடியே 53 லட்சம் நுகர்வோர்கள் உள்ளனர். இவர்களில் கடந்த டிசம்பர் மாதம் இறுதி வரை சுமார் 50 லட்சத்து 85 ஆயிரம் பேர் நேரடி காஸ் மானிய திட்டத்தில் இணைந்திருந்தனர். அவர்களில் நேரடி காஸ் திட்டம் அமுல்படுத் தப்பட்ட பின்பு கடந்த 10 நாட்களில் சுமார் 8 லட்சத்து 49 ஆயிரம் பேர்கள் இந்த மாதத்துக்கான காஸ் பதிவு செய்துள்ளனர்.
அவர்களுக்கு சுமார் 48 கோடியே 22 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. நுகர்வோர் ஒருவருக்கு ரூ.568 என்ற அடிப்படையில் முன்பண தொகை வழங்கப்பட்டுள்ளது.