தமிழகம்

‘மாண்புமிகு’ மேயர் என்றழைக்க தொடங்கிய சென்னை மாநகராட்சி

செய்திப்பிரிவு

சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமியை ‘வணக்கத் திற்குரிய’ என்றழைக்காமல் ‘மாண்புமிகு’ என்று அழைக்கத் தொடங்கியுள்ளது மாநகராட்சி நிர்வாகம்.

தமிழகத்திலுள்ள அனைத்து மாநகராட்சி மேயர்களையும் ‘வணக்கத்திற்குரிய’ என்றழைக்காமல் ‘மாண்புமிகு’ என்றழைக்க வேண்டும் என்று டிசம்பர் 10-ம் தேதி தமிழக உள்ளாட்சித் துறை அரசாணை வெளியிட்டது. இது குறித்து அனைத்து மாநகராட்சிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து, சென்னை மாநகராட்சி தாமதிக்காமல் அதனை உடனே அமல்படுத்த ஆரம்பித்துவிட்டது. இந்த அரசாணை வெளிவந்த பிறகு, டிசம்பர் 29-ம் தேதி நடைபெற்ற முதல் மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் மேயரை ‘மாண்புமிகு’ என்றே அழைத்தனர்.

மன்றக் கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பும் போதும், கருத்து தெரிவிக்கும் போதும் ‘மாண்புமிகு’ மேயர் என்றே அழைத்தனர். அலுவல கங்கள் மற்றும் வாகனங்களில் உள்ள பெயர் பலகைகளையும் ‘மாண்புமிகு’ மேயர் என்று மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் சென்னை யில் தொடங்கப்பட்ட தமிழக அரசின் சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியில் மேயர் சைதை துரைசாமி கலந்து கொண்டபோதும் ‘மாண்புமிகு’ என்ற வார்த்தையே பயன்படுத்தப்பட்டது.

SCROLL FOR NEXT