ராணுவ தினத்தை முன்னிட்டு, சென்னையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்தியாவின் ராணுவ தளபதியாக முதன்முதலில் ஜெனரல் கரியப்பா 1948, ஜனவரி 15-ம் தேதி பதவியேற்றார். இதைக் கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும் ஜனவரி 15-ம் தேதி ராணுவ தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் தென்மண்டல ராணுவ அதிகாரி ஆர்.ஜி.கிருஷ்ணன் நேற்றுமுன்தினம் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், ராணுவத்தில் பல்வேறு சாதனைகள் புரிந்து பதக்கம் வென்ற 30 பேர் கவுரவிக்கப்பட்டனர்.