திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள மாதர்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோஸ்வா (37). இவர் கடந்த 8 மாதங்களாக ஆவடி, ஜெ.பி.எஸ்டேட் 3- வது குறுக்குத் தெருவில் வசித்து வந்தார். பி.காம் படித்த ஜோஸ்வா, தான் எம்.டி. படித்த டாக்டர் என்றும், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வருவதாகவும் கூறி கொண்டு தன் வீட்டில் மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.
இதுகுறித்து, ஜோஸ்வா வீட்டின் அருகே வசிக்கும் மோகன் என்பவர் ஆவடி காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப் படையில், போலீஸார் நடத்திய விசாரணையில், ஜோஸ்வா போலி மருத்துவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை ஆவடி போலீ ஸார் நேற்று கைது செய் தனர்.