தமிழகம்

3 நாட்கள் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி: டேங்கர் லாரி ஸ்டிரைக் தொடங்கியது - 5 மாநிலங்களிலும் காஸ் விநியோகம் பாதிக்கும் அபாயம்

செய்திப்பிரிவு

எண்ணெய் நிறுவனங்களுடன் நடத் தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வி யடைந்துள்ள நிலையில், டேங்கர் லாரி உரிமையாளர்கள் நேற்று நள்ளிரவு முதல் வேலைநிறுத் தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் காஸ் விநியோகம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகம், ஆந்திரம், கேரளம் உட்பட 5 மாநிலங்களில் தினமும் 3,250-க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் மூலம் காஸ் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த லாரி களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய வாடகை ஒப்பந்தம் போடப் படுகிறது. பழைய ஒப்பந்தம் முடிந் ததையடுத்து கடந்த நவம்பர் 1-ம் தேதி முதல் புதிய ஒப்பந்தத்தை அமல்படுத்தி இருக்க வேண்டும்.

ஆனால், புதிய ஒப்பந்தம் அமல்படுத்தப்படாததால் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டது. இந்நிலையில், சென்னை எழும்பூரில் எண்ணெய் நிறுவனங்களுடன் டேங்கர் லாரி உரிமையாளர்கள் 3 நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். எண்ணெய் நிறுவன உயர் அதிகாரிகள் 10 பேர், டேங்கர் லாரி உரிமையாளர்கள் தரப்பில் 30 பேர் கலந்து கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததையடுத்து டேங்கர் லாரி உரிமையாளர்கள் நள்ளிரவு முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக தென்மண்டல எல்பிஜி லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் செயலாளர் கார்த்திக், முன்னாள் தலைவர் எம்.பொன்னம்பலம் ஆகியோரிடம் கேட்டபோது, ‘‘புதிய வாடகை ஒப்பந்தத்தில் 10 சதவீதம் வாடகை உயர்வு கேட்டோம். ஆனால், எண்ணெய் நிறுவனங்கள் 5 சதவீத வாடகை உயர்த்தி தர முன் வந் துள்ளனர். இதனால், வேலைநிறுத் தத்தில் ஈடுபட முடிவு செய்துள் ளோம். அதன்படி, 5 மாநிலங்களில் இயக்கப்படும் எங்களது 3,250 டேங்கர் லாரிகள் நிறுத்தப்படும். இதனால் காஸ் விநியோகம் பாதிக்கும். தினமும் எங்கள் டேங்கர் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படும் சுமார் 1000 டன் காஸ் நிறுத்தப்படும். எண்ணெய் நிறுவனங்கள் எங்களது கோரிக்கை ஏற்றாத வரையில் வேலைநிறுத்தம் தொடரும்’’ என்றனர்.

SCROLL FOR NEXT