டாஸ்மாக் மதுபான கடையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து மீன் வியாபாரி கடத்தி கொலை செய்யப்பட்டார்.
சென்னை மேற்கு தாம்பரம் ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் பெருமாள் (30). தாம்பரம் மீன் சந்தையில் கடை வைத்திருந்தார். கடந்த 8-ம் தேதி மாலை வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பெருமாளின் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இந்நிலையில் தாம்பரம் பெரியார் நகர் பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையில் நேற்று மாலை அழுகிய நிலையில் ஒரு உடல் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸார் நடத்திய விசாரணையில் அது காணாமல்போன பெருமாள் என்பது தெரியவந்தது.
பெருமாளின் கழுத்து, மார்பு உட்பட பல இடங்களில் கத்திக் குத்து காயங்கள் இருந்தன. அவரது கால்களும் கட்டப்பட்டிருந்தன. இதனால் பெருமாளை யாராவது கடத்திச் சென்று கொலை செய்திருக் கலாம் என்று போலீஸார் சந்தேகித் தனர்.
இதைத் தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில் ரங்க நாதபுரத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் பெருமாளுக் கும், ஒரு கும்பலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது தெரியவந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் பெருமாளை கடத்திச் சென்று கொலை செய்திருக் கலாம் என்று போலீஸார் சந்தேகிக் கின்றனர்.
மதுக்கடையில் பெரு மாளுடன் மோதலில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.