தமிழகம்

நோக்கியா ஆலையை திறக்க அருண் ஜேட்லியிடம் தொமுச வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

நோக்கியா ஆலையை திறக்க மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லியிடம் தொமுச வலியுறுத்தியுள்ளது.

மத்திய நிதி அமைச்சர் நிதிநிலை அறிக்கை தயாரிப் பதற்கு முன்பாக ஆண்டுதோறும் அனைத்து தரப்பினரையும் அழைத்துப் பேசுவது வழக்கம். அதன் அடிப்படையில் கடந்த 17-ம் தேதி அனைத்து மத்திய தொழிற்சங்கங்களையும் அழைத்துப் பேசினார்.

தொமுச உட்பட தொழிற்சங்கங்கள் சார்பில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக் கப்பட்டன.

அப்போது, ஸ்ரீபெரும்புதூரில் மூடப்பட்ட நோக்கியா தொழிற் சாலையை திறக்க தொமுச சார்பில் வலியுறுத்தப்பட்டது. தொழிற்சாலை உற்பத்தி தொடங்குவது குறித்தும் விரைவான நடவடிக்கை மேற் கொள்வதாக அமைச்சர் உறுதி அளித்ததாக தொமுச பொதுச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT