தமிழகம்

சென்னையில் நாட்டு வெடிகுண்டு வீசி ஆட்டோ ஓட்டுநர் கொலை

செய்திப்பிரிவு

சென்னை அருகே நாட்டு வெடிகுண்டு வீசி, அரிவாளால் வெட்டி ஆட்டோ ஓட்டுநர் கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கூடுவாஞ்சேரி அடுத்த பெருமாத்தநல்லூரில் இந்தத் தாக்குதல் நடந்தது. இதில் ஆட்டோ ஓட்டுநர் பிரதாப் உயிழிந்தார்.

யார் இந்தத் தாக்குதலை நடத்தியது என தெரியவில்லை. முன்விரோதம் காரணமாக மர்ம நபர்கள் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

இறந்த பிரதாப் உடலை வைத்துக்கொண்டு , அவரது உறவினர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். கொலையாளிகள் யார் என்று கண்டுபிடித்து, அவர்களைக் கைதுசெய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுப்பியுள்ளனர்.

SCROLL FOR NEXT