சென்னையில் உள்ள போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டை முற்றுகையிட்ட 200 லாரி உரிமையாளர்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
''போக்குவரத்து துறையில் ஊழல் பெருகிவிட்டது. அதிக பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகள் மீது அமைச்சர் நடவடிக்கை எடுக்கவில்லை. கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் பிபர்வரி 24-ல் கோட்டையை முற்றுகையிடுவோம்'' என்று லாரி உரிமையாளர்கள் கூறினர்.
இதைத்தொடர்ந்து தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் 200 பேர் செந்தில் பாலாஜி வீட்டை முற்றுகையிட முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
முற்றுகையிட முயன்ற 200 பேரையும் போலீஸ் கைது செய்தது.