தமிழகம்

குற்றங்களை தடுக்க புறநகர் மின்சார ரயில்களில் கூடுதல் பாதுகாப்பு

செய்திப்பிரிவு

புறநகர் மின்சார ரயில்களில் குற்றம் செய்பவர்களை பிடிக்க கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை புறநகர் மின்சார ரயில்களில் ஒரு பெண்ணையும், ரயில்வே ஊழியர் ஒருவரையும் தாக்கி பணம் கொள்ளையடிக்கப் பட்டது. இந்த குற்றங்களில் ஈடு பட்டவர்கள் இன்னும் பிடிபட வில்லை. அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்கள் பயணிகளிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

அதைத் தொடர்ந்து ரயில்வே ஐ.ஜி. சீமா அகர்வால் தலைமையில் பாதுகாப்பு தொடர்பான ஆலோ சனை கூட்டம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடத்தப்பட்டது. இதில் பயணிகளின் பாதுகாப்புக்கு கூடு தல் காவலர்களை பயன்படுத்துவது என்றும், சுழற்சி முறையில் பாது காப்புப் பணிகளில் 24 மணி நேரமும் காவலர்களை ஈடுபடுத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் பணிகள் குறித்து ரயில்வே போலீஸாரிடம் கேட்டபோது, "கடற்கரை மற்றும் சென்ட்ரலில் இருந்து புறப்படும் புறநகர் மின்சார ரயில்களில் காலை மற்றும் மாலை நேரத்தில் பெட்டிக்கு ஒரு காவலரும், மற்ற நேரங்களில் ஒரு ரயிலுக்கு 2 காவலரும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுகின்றனர். ரயில் நிலையங்களில் 2 காவலர்கள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

வருகிற புதன்கிழமை முதல் பொங்கல் பண்டிகை கூட்டம் தொடங்கிவிடும். இதற்காக இப்போதே போலீஸார் தயாராகிவிட்டனர். தற்போதுள்ள பாதுகாப்புடன் கூடுதலாக 80 காவலர்களைக் கொண்டு புறநகர் மின்சார ரயில்களில் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்" என்று தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT