சென்னை ஷெனாய் நகரில் மெட்ரோ ரயில் பணிகளின்போது ஏற்படும் நில அதிர்வுகளை அளவிடும் கருவிகள் பொருத்தப்பட்டு வருகின்றன.
ஷெனாய் நகரில் மெட்ரோ ரயில் பணிகளுக்காக சுரங்கப் பாதை தோண்டப்பட்டது. அப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் திங்கள்கிழமை திடீ ரென்று ஏற்பட்ட விரிசல் அப்பகுதியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து அப்பகுதியில் நில அதிர்வுகளை அளவிடும் கருவிகள் பொருத்தப்பட்டு வருகின்றன.
சென்னையில் மெட்ரோ ரயில் பணிகளுக்காக ஐந்து இடங்களில் சுரங்கப்பாதைகள் தோண்டப்படுகின்றன. இந்த இடங்களில் மெட்ரோ ரயில் பணிகளின் காரணமாக ஏதேனும் பாதிப்பு ஏற்படுகிறதா என்று கண்டறிய நில அதிர்வுகளை அளவிடும் கருவிகள் அவ்வப்போது பொருத்தப்பட்டு சோதித்துப் பார்க்கப்படுகிறது.
இது குறித்து மெட்ரோ ரயில் அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது: பூமிக்கு அடியில் சுரங்கப்பாதை பணிகள் தொடங்கும் முன்பு அப்பகுதியில் உள்ள கட்டிடங்களை ஒரு குழு ஆய்வு செய்யும். அப்போது அங்குள்ள பழுதடைந்த கட்டிடங் களை கவனத்தில் கொண்டு, அங்கு நில அதிர்வு கருவிகள் பொருத்தப்படும். பணிகள் ஆரம்பிக்கும் முன் கட்டிடம் எவ்வாறு இருக்கிறது என்பதையும் பணிகள் நடைபெறும் போது கட்டிடத்துக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுகிறதா என்பதையும் இந்த கருவி பதிவு செய்து கொண்டே வரும். பாதிப்பு ஏற்படுகிறது என்று தெரிந்தால், கட்டிட உரிமையாளருக்கு உடனே தகவல் தெரிவித்து அவர் களை வேறு இடத்துக்கு செல்ல அறிவுறுத்துவோம். தேவைப் படும் இடங்களில் இழப்பீடு வழங்குவோம். பழைய கட்டிடங் கள் அதிகம் உள்ள வண்ணாரப் பேட்டை-சென்ட்ரல் வழித்தடத் தில் இந்த கருவிகள் அதிக அளவில் பயன்படுத்தப் படுகின்றன.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.