தமிழகம்

நன்மங்கலம், தாம்பரம், நீலாங்கரை பகுதிகளில் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவதில் போலீஸார் மெத்தனம்: குழந்தைகள் நலக் குழுமம் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறுமி கள் பாலியல் வன்கொடுமை தொடர்பாக அளிக்கப்படும் புகார்கள் மீது வழக்கு பதிவு செய்வதில் போலீஸார் மெத்தனம் காட்டுவதாக தன்னார்வலர்கள் மற்றும் குழந்தைகள் நலக் குழுமம் குற்றம்சாட்டியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், நன்மங்கலம் மற்றும் தாம்பரம் பகுதியில் தந்தையால் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட 7 மற்றும் 12 வயது சிறுமிகள் மற்றும் நீலாங்கரை பகுதியில் 16, 12 வயதுள்ள இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு தாயே உடந்தையாக இருந்துள்ளார். இதுகுறித்து, சைல்டு லைன் மூலம் வந்த புகாரின்பேரில் மாவட்ட குழந்தைகள் நலக் குழும அதிகாரிகள் நேரில் சென்று சிறுமிகளை நேற்று முன்தினம் மீட்டனர்.

இதில் இரு சிறுமிகள் தனித் தனி காப்பகங்களில் தங்க வைக் கப்பட்டுள்ளனர். மேலும், இருவ ருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், சிறுமிகள் பாலி யல் வன்கொடுமை தொடர்பாக அளிக்கப்படும் புகார்கள் மீது வழக்கு பதிவு செய்வதில் போலீ ஸார் மெத்தனமாக செயல்படுவ தால் குழந்தைகளை மீட்பது மற்றும் மீட்கப்பட்ட சிறுமிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பது போன்ற பல்வேறு பணிகளில் சட்டரீதியான பிரச்சினைகள் ஏற்படுவதாக, குழந்தைகள் நலக் குழுமம் புகார் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் நலக் குழுமத்தின் உறுப்பினர் ஜஹீருதின் முகம்மது கூறியதாவது: நீலாங்கரை மற்றும் தாம்பரம் பகுதியில் பெற்றோர்களால் பாலியல் வன்கொடுமைக்குக் குட்படுத்தபட்ட நான்கு சிறுமிகள் சைல்டு லைன் மூலம் வந்த புகாரின்பேரில் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களின் பெற்றோர் மீது நீலாங்கரை மற்றும் பள்ளிக்கரணை போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார்களின் மீது வழக்கு பதிவு செய்வதில் போலீஸார் மெத்தனமாக செயல்படுகின்றனர்.

மேலும், சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படு வது தொடர்பாக, தன்னார்வலர்கள் யாரேனும் புகார் அளித்தாலும் போலீஸார் இதுபோல் செயல்படும் நிலை உள்ளது. இதனால் சிறுமிகள் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தும் அவர்களை மீட்பது மற்றும் மீட்கப்பட்ட சிறுமிகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதில் பல்வேறு சட்டரீதியான பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

சில நேரங்களில் முதல் தகவல் அறிக்கையின் நகல் இருந்தால் மட்டுமே அரசு மருத்துவமனைகளில் மீட்கப்பட்ட சிறுமிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும் என்ற நிலை ஏற்படுகிறது. இதனால், சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவது தொடர்பாக வரும் புகார்கள் மீது போலீஸார் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்ய முன் வரவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து பள்ளிக்கரணை காவல் ஆய்வாளர் நடராஜன், நீலாங்கரை ஆய்வாளர் பாஸ்கரன் ஆகியோர் கூறியது: பாலியல் வன்கொடுமை தொடர்பாக வரும் புகாரின்பேரில், குழந்தைகள் நலக் குழுமத்தினர் சம்பந்தப்பட்ட சிறுமிகளை நேரில் சென்று மீட்கின்றனர். ஆனால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய நபர்களின் மீதான புகார்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காவல் நிலையத்துக்கு நேரில் வந்து அளிப்பதில்லை.

மேலும், சிறுமிகள் வாய்மொழி யாக கூறும் புகாரின்பேரில் சம்பந்தப்பட்ட நபரிடம் விசா ரிக்கும்போது சிறுமி தவறான புகார்களை அளிப்பதாக கூறுகின்றனர். இதனால், பல்வேறு சட்ட பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அதனால், அனைத்து தரப்பிலும் விசாரித்து பின்னர் வழக்கு பதிவு செய்யும் நிலை உள்ளது. நாங்கள் மெத்தனமாக செயல்படவில்லை’ என்றனர்.

SCROLL FOR NEXT