தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பாமக விலகினால் எந்த பின்னடைவும் ஏற்படாது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கூட்டணியில் இருந்து பாமக விலகினால் அது எந்த அளவிலும் பின்னடவை ஏற்படுத்தாது. மீத்தேன் திட்டத்தை பொருத்தவரை தமிழகத்தின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு செயல்படும்" என்றார்.