திமுக தலைமைக் கழக நிர்வாகிகள் பட்டியலை கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் நேற்று வெளியிட்டார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு விவரம்:
உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர்கள்
மு.கருணாநிதி, க.அன்பழகன், மு.க.ஸ்டாலின், துரைமுருகன், வி.பி.துரைசாமி, சற்குணபாண்டியன், ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆர்.எஸ்.பாரதி, ஆற்காடு வீராசாமி, கோ.சி.மணி, டி.ஆர்.பாலு, டி.கே.எஸ்.இளங்கோவன், ஆ.ராசா, தயாநிதி மாறன், பொன்முடி, கனிமொழி, செ.மாதவன், சுப.தங்கவேலன், கோவை மு.ராமநாதன், அ.ரகுமான்கான், கே.என்.நேரு, எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், கரூர் கே.சி.பழனிசாமி, கோவை மு.கண்ணப்பன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வீ.கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
செயலாளர்கள்
இளைஞர் அணிச் செயலாளராக மு.க.ஸ்டாலின், அமைப்புச் செயலாளராக ஆர்.எஸ்.பாரதி, சட்டத்துறைத் தலைவராக ஆர்.சண்முகசுந்தரம், கொள்கை பரப்புச் செயலாளர்களாக திருச்சி சிவா, ஆ.ராசா, தலைமைக் கழக செய்தித் தொடர்பு செயலாளராக டி.கே.எஸ்.இளங்கோவன், சட்டத்திட்ட திருத்தக் குழுச் செயலாளராக வழக்கறிஞர் பி.வில்சன்,தேர்தல் பணிக்குழுத் தலைவராக எல்.கணேசன், தொழிலாளர் அணிச் செயலாளராக சிங்கார ரத்தினசபாபதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது தவிர, விவசாய அணிச் செயலாளராக கே.பி.ராமலிங்கம், கரூர் ம.சின்னச்சாமி, விவசாய தொழிலாளர் அணிச் செயலாளராக அழகு திருநாவுக்கரசு, மீனவர் அணிச் செயலாளராக கே.பி.பி.சாமி, மாணவர் அணிச் செயலாளராக கடலூர் இள.புகழேந்தி, கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவைப் புரவலராக ஜெகத்ரட்சகன், மகளிர் அணித் தலைவராக காஞ்சனா கமலநாதன், செயலாளராக கனிமொழி, வர்த்தக அணிச் செயலாளராக காசி முத்துமாணிக்கம் உள்ளிட்டவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தலைமைநிலைய அலுவலக செயலாளர்களாக ஆயிரம் விளக்கு உசேன், கு.க.செல்வம், துறைமுகம் காஜா, ஆ.த.சதாசிவம், பூச்சிமுருகன்.
சொத்து பாதுகாப்புகுழு தலைவராக அறந்தாங்கி ராசனும், துணைத்தலைவராக பொங்கலூர் பழனிச்சாமியும், செயலாளர்களாக கே.சி.பழனிச்சாமி, பெ.சு.திருவேங்கடம், முகமது சகி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் தீர்மானக்குழு தலைவராக பொன்.முத்துராம லிங்கம், குழுச்செயலாளர்கள் சபாபதி மோகன், குழந்தை தமிழரசனும், இணைச்செயலாளர் களாக சத்தியமூர்த்தி மற்றும் திருச்சி என்.செல்வராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.