தமிழகம்

பழவேற்காடு கலவரம்: 13 ஆந்திர மீனவர்கள் கைது

செய்திப்பிரிவு

பழவேற்காட்டில் நிகழ்ந்த கலவரம் தொடர்பாக, செவ்வாய்க்கிழமை மேலும் 13 ஆந்திர மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பழவேற் காட்டு ஏரியில் எல்லை தாண்டி மீன் பிடிப்பது தொடர்பாக பயங்கர கலவரம் ஏற்பட்டது. இது தொடர்பாக, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 13-ம் தேதி 14 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், நொச்சிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஆந்திர மீனவர்கள், பழவேற்காட்டு பகுதியில் பதுங்கி இருப்பதாக திருப்பாலைவனம் போலீஸா ருக்கு செவ்வாய்க்கிழமை ரகசிய தகவல் கிடைத்தது. இதை யடுத்து, பழவேற்காட்டு பகுதியில் பதுங்கியிருந்த 13 ஆந்திர மீனவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

          
SCROLL FOR NEXT