செங்கல்பட்டு நகராட்சியின் அனுமதியின்றி தனியார் பள்ளிகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுவதாகவும், நகர மைப்பு துறையினர் இதைக் கண்டுகொள்ளாமல் உள்ளதாக செங்கல்பட்டு நகரமன்ற கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட் டது. இதனால் வரியிழப்பு ஏற்படுவ தாக கவுன்சிலர்கள் சரமாரியாக புகார் தெரிவித்ததால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல் பட்டு நகரமன்ற கூட்டம் நகரமன்ற தலைவர் அன்புச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. இதில், நகராட்சி அதிகாரிகள் மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டம் தொடங்கியதும் 33-வது வார்டு நகரமன்ற உறுப்பினர் சந்தோஷ், ‘அண்ணாநகர் பகுதியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான நிலத்தை, வீட்டு வசதி வாரிய கூட்டுறவு சங்கம் ஆக்கிரமித்துள்ளது. இந்த நிலத்தை ஒப்படைக்குமாறு நோட்டீஸ் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. மாறாக
நிலத்தை நகராட்சி கட்டுப்பாட் டில் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள் ளும் உறுப்பினர்களை சமூக விரோதிகள் என அவமானப்படுத்தி வருகின்றனர். இதனால், நிலத்தை மீட்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
இதைத் தொடர்ந்து, 8-வது வார்டு கவுன்சிலர் பிரபுவேல், ‘தட்டான்மலை பகுதியில் குடிநீர் விநியோகம் முறையாக இல்லை. அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. குடிநீர் வாரிய அதிகாரிகள் முறைகேடாக, குடிநீர் விநியோகம் செய்து வருகின்றனர். பிரச்சினைக்கு தீர்வு காணாமல் தற்காலிக நடவடிக்கை என்ற பேரில் செயல்படுவதால், அனைத்து வார்டுகளிலும் செயற்கையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ஒருசில பள்ளி நிர்வாகங்கள் ஓரடுக்கு கட்டிடத்துக்கு அனுமதி பெற்றுவிட்டு, 3 அடுக்கு கட்டிடம் கட்டியுள்ளனர். இவ்வாறான கட்டிடங்களில் பாதுகாப்பு வசதி உள்ளதா என அதிகாரிகள் ஆய்வு செய்வதில்லை. நகரமைப்பு துறையில் 6 பணியாளர்கள் இருந் தும் முறையாக கண்காணித்து வரி விதிப்பதில்லை’ என்று புகார் தெரிவித்தார்.
26-வது வார்டு கவுன்சிலர் முரளி பேசும்போது, ‘நகராட்சி பகுதியில் வரிவசூல் செய்வதற்கான விளம்பரத்துக்காக ரூ.1.5 லட்சம் நிதி ஒதுக்க வேண்டும் என தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதிகாரிகள் பணியே செய்யாத போது, வீணாக விளம்பர செலவு எதற்கு’ என்று கேள்வியெழுப் பினார். கவுன்சிலர்களின் தொடர் குற்றச்சாட்டுகளால் கூட்டத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
கவுன்சிலர்களின் புகார் களுக்கு நகரமன்ற தலைவர் அன்புச்செல்வன் பதில் அளித்து பேசியதாவது: நகராட்சிக்கு சொந்தமான நிலத்தை மீட்ப தற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். உறுப்பினர்களை அவமதித்த கூட்டுறவு சங்க தலைவ ருக்கு சட்ட ரீதியாக நோட்டீஸ் அளிக்கப்படும். நகராட்சியின் அனைத்து பகுதிகளுக்கும் சீரான முறையில் குடிநீர் வழங்கப்படும். மாற்று மின்மோட்டார்களை துரிதமாக பழுது நீக்க குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு உத்தர விடுகிறேன்.
நகரமைப்பு துறை அதிகாரி கள் மூலம் முறைகேடாக உள்ள கட்டிடங்கள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப் படும். வரி வசூலுக்காக, நகராட்சி வாகனத்திலேயே ஒலி பெருக்கி அமைத்து விளம்பரம் செய்யப்படும். நகராட்சியில் போதிய நிதி இல்லாததால் பல்வேறு வளர்ச்சி பணிகளை உடனடியாக மேற்கொள்ள முடியவில்லை என்றார்.