மாற்றுத் திறன் குழந்தைகளை பாதுகாத்து வளர்ப்பது சமூகத்தின் கடமை என்ற கருத்தை வலியுறுத்தி சென்னையில் நேற்று மனிதச் சங்கிலி நடைபெற்றது.
மாற்றுத் திறன் குழந்தைகளின் கல்விக்காக ‘கேர்’ என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதன் சார்பில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற மனிதச் சங்கிலி சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடந்தது. இதுபற்றி ‘கேர்’ அமைப்பின் நிறுவனர் கல்பனா குமார் பேசியதாவது:
மாற்றுத் திறன் குழந்தைகளில் சிலருக்கு உடல்ரீதியான பிரச் சினைகள், சிலருக்கு மனரீதி யான பிரச்சினைகள் இருக்கும். தங்களுக்கு இதுபோன்ற குழந்தை கள்தான் பிறக்கும் என்று அவர் களது பெற்றோர்களுக்கு முன்கூட் டியே தெரிவதில்லை. அதனால் அவர்கள் மனதளவில் தயாராக இருப்பதில்லை. எனினும், பிறந்த குழந்தையை பாதுகாத்து வளர்க்க முடிந்த அளவுக்கு முயற்சி எடுக் கிறார்கள். இது ஒரு குடும்பத்தின் பொறுப்பாக மட்டுமே நின்றுவிடக் கூடாது. சமூகப் பொறுப்பாக மாறவேண்டும்.
கல்வி உரிமைச் சட்டப்படி பள்ளிகளில் 2 சதவீத மாணவர்கள் மாற்றுத் திறன் மாணவர்களாக இருக்கலாம். ஆனால், பெரும்பாலான பள்ளி கள் இவர்களை சேர்த்துக் கொள்வதில்லை. இவர்களையும் சாதாரணப் பள்ளிகளில் சேர்க் கலாம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த மனிதச் சங்கிலி நடத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார். நடிகர் விவேக் சிறப்பு விருந் தினராக கலந்துகொண்டார்.
‘கேர்’ அமைப்பில் பணிபுரியும் ஹெலன் கூறும்போது, ‘‘மாற்றுத் திறன் மாணவர்களால் மற்ற மாணவர்களுடன் சகஜமாக பேச, பழக முடியும். ஆசிரியர் கூறுவதைக் கற்றுக்கொள்வதில் அவர்களுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்படும்போது, அவர்களுக்காக நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர் உதவி செய்தால் போதும். அவர்களும் சாதாரணப் பள்ளிகளில் சேர்ந்து படிக்க முடியும்’’ என்றார்.