ஆவடி அடுத்த திருமுல்லைவாயலில், கழிவுநீர் தொட்டியில் விழுந்து, பள்ளி சிறுவன் பலியானான்.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் க ணபதி நகரில் வசிப்பவர் சுஜாராம். இவரது மனைவி கௌரி தேவி. இவர்களின் மகன் முகேஷ் (7). முகேஷ் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். சுஜாராம் அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். புதன்கிழமை மாலை பள்ளி முடிந்ததும் முகேஷை, கௌரி தேவி வீட்டிற்கு அழைத்து வந்தார். வீட்டின் அருகே வந்ததும், முகேஷை வீட்டிற்கு போகச் சொல்லி விட்டு, அருகில் வசிக்கும் உறவினருடன் கௌரி தேவி பேசிக் கொண்டிருந்தார்.
சிறிது நேரம் கழித்து கௌரி தேவி வீட்டுக்குச் சென்றார். அப்போது, முகேஷ் வீட்டில் இல்லை. இதையடுத்து, திருமுல்லைவாயல் போலீஸுக்கு தகவல் அளித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது, வீட்டின் முன்பு இருந்த கழிவுநீர் தொட்டியின் சிமெண்ட் மூடி சிறிதளவு உடைந்து இருப்பதைக் கண்டு சந்தேகம் அடைந்தனர்.
உடனே, அம்பத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீய ணைப்பு வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் இரண்டுமணி நேரத்துக்குப் பின், கழிவுநீர் தொட்டிக்குள் கிடந்த முகேஷின் உடலை மீட்டனர்.
போலீஸார் முகேஷின் உட லைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக் காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, திருமுல்லைவாயல் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.