தமிழகம்

அக்​.6-ம் தேதி இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 28, தாராபுரத்தில் 30 மனுக்கள் ஏற்பு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தில் மது​ராந்​தகம், தாராபுரம் ஆகிய 2 தனித் தொகு​தி​களுக்கு அக்​.6-ம் தேதி இடைத்​தேர்​தல் நடை​பெற உள்​ளது. இதற்​கான வேட்​புமனு தாக்​கல் கடந்த 9-ம் தேதி தொடங்கி 16-ம் தேதி​யுடன் முடிவடைந்​தது.

இதில் தவெக, திமுக, அதி​முக, நாதக, இந்​திய கம்​யூனிஸ்ட், மார்க்​சிஸ்ட் ஆகிய கட்​சிகளின் வேட்​பாளர்​கள், சுயேச்​சைகள் என மது​ராந்​தகத்​தில் 48 மனுக்​களும், தாராபுரத்​தில் 51 மனுக்​களும் தாக்​கல் செய்​யப்​பட்​டன.

இந்​நிலை​யில், வேட்​புமனுக்​கள் மீதான பரிசீலனை நேற்று நடை​பெற்​றது. இதில் மது​ராந்​தகம் தொகு​தி​யில் பிர​தான கட்​சிகளின் வேட்​பாளர்​கள் உட்பட 28 மனுக்​கள் ஏற்​கப்​பட்​டு, முறை​யான ஆவணங்​கள் இல்​லாத 20 மனுக்​கள் நிராகரிக்​கப்​பட்​டன. தாராபுரம் தொகு​தி​யில் 30 மனுக்​கள் ஏற்​கப்​பட்​டு, 21 மனுக்​கள் நிராகரிக்​கப்​பட்​டன.

நாளை வேட்பாளர் பட்டியல்: மனுக்​களை திரும்​பப் பெறு​வதற்​கான அவகாசம் நாளை (செப்​.19) நிறைவடைகிறது. அதைத் தொடர்ந்​து, நாளை மாலை இறுதி வேட்​பாளர் பட்​டியல் வெளி​யிடப்​பட்​டு, சின்​னம் ஒதுக்கப்படும் என்று தேர்​தல் அதி​காரி​கள்​ தெரி​வித்​தனர்​.

SCROLL FOR NEXT