தமிழகம்

பூந்தமல்லியில் போலீஸார் கண் முன்னே நீதிமன்ற வளாகத்தில் கைதி வெட்டிக் கொலை

செய்திப்பிரிவு

நீதிமன்ற விசாரணைக்காக சிறையில் இருந்து அழைத்து வரப்பட்ட கைதி ஒருவர், பூந்தமல்லி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். போலீஸார் கண் முன்னே நடந்த இந்த வெறிச் செயலால் பூந்தமல்லி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை, நெசப்பாக்கம், பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வரதன் என்கிற வரதராஜ் (37). இவர், 2010-ம் ஆண்டு காட்டுப்பாக்கத்தில் முருகன் என்பவர் கொல்லப்பட்ட வழக்கிலும், கடந்த ஆண்டு நவம்பரில் நெசப்பாக்கத்தில், அதிமுக ஜெயலலிதா பேரவை வட்டச் செயலாளர் விஸ்வநாதன் என்கிற புல்லட் விஸ்வநாதன் கொல்லப்பட்ட வழக்கிலும் தொடர் புடையவர். புல்லட் விஸ்வநாதன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, வேலூர் மத்திய சிறையில் இருந்த வந்தார்.

இந்நிலையில், முருகன் கொலை வழக்கின் விசாரணைக் காக, பூந்தமல்லி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம்-2க்கு நேற்று மதியம் அழைத்து வரப்பட்டார். அப்போது, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 4 பேர் கொண்ட மர்ம கும்பல், போலீஸார் கண் முன்னே வரதராஜை அரிவாளால் வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பியோடி விட்டது.

இதில், தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயமடைந்த அவர், பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சை பெற்றார். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட வரத ராஜ், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து, வழக்கு பதிவு செய்த பூந்தமல்லி போலீ ஸார், புல்லட் விஸ்வநாதன், முருகன் ஆகியோரின் கொலை களுக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக வரதராஜ் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT