புரசைவாக்கத்தில் மோதலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
பெரம்பூரில் இருந்து திருவேற்காடு நோக்கி மாநகர அரசு பஸ் 29-இ நேற்று மாலை சென்றுகொண்டிருந்தது. கல்லூரி மாணவர்கள் பலர் பஸ்ஸில் பயணம் செய்தனர். புரசைவாக்கம் கெல்லீஸ் சந்திப்பு அருகில் பஸ் சென்றபோது அங்கு நின்று கொண்டிருந்த மற்றொரு கல்லூரி மாணவர்கள், பஸ்ஸில் இருந்த மாணவர்கள் மீது திடீரென கற்களை வீசி தாக்கத் தொடங்கினர்.
இதனால் பஸ் கண்ணாடிகள் உடைந்தன. பஸ்ஸில் இருந்த பயணிகள் அலறி அடித்துக் கொண்டு கீழே இறங்கி ஓடினர். இதையடுத்து இரு கல்லூரி மாணவர்களும் மோதலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு போலீஸார் விரைந்து வந்தனர்.
தப்பியோட முயற்சி
தப்பியோட முயன்ற மாணவர்களை போலீஸார் விரட்டிச் சென்று பிடித்து கைது செய்தனர். விசாரணை நடைபெற்று வருகிறது.